|
நூலடைவுத் தரவுத்தளம்
The Mandate
|
இந்தியாவில் மொழிபெயர்ப்புத் தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் ஒரு தகவல் பரிமாற்றத்
தீர்வகமாக இருப்பது.
|
தரவுத்தள வடிவமைப்பிற்கு தேவையான உள்ளீடுகளையும், தரவுத்தளத்திற்குத் தேவையான தகவல்களையும்
அளித்த பேராசிரியர் ஜி.என். தேவி, பாஷா சன்ஷோதன் கேந்திரா, வடோதரா, அவர்களுக்கு மனமார்ந்த
நன்றி.
|
நூலடைவு ஏன்?
|
நூலடைவு என்பது புத்கங்களைப் பற்றிய ஒரு முறையான ஆய்வும் அதனைப் பற்றிய விவரங்களையும்
உள்ளடக்கியதாகும். இது நூல் தலைப்புகளின் ஒரு பட்டியல் ஆகும். இதில் விவாதப்பொருள்
அல்லது மொழி அல்லது காலம் போன்ற சில பொதுவான காரணிகள் பகிரப்படும். இந்தப் பட்டியல்
அடிப்படையில் பரந்துபட்டதாகவோ அல்லது பிரத்தியேகமானதாகவோ இருக்கலாம்.
|
நூலடைவின் நோக்கம் கொடுக்கப்பட்டிருக்கும் நூலின் முக்கியமான தகவல்களை ஒழுங்குப்படுத்தித்
தருவதாகும். இது அந்த நூலைப் பற்றிய விபரங்களை தேடுபவர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்யும்.
இந்த தகவலானது ஒரு நூலின் அல்லது ஒரு தயாரிப்பின் செயல்பாடுகளோடு தொடர்புடையதாக இருக்கிறது.
இவ்வாறாக, நூலடைவு நமக்கு நூலின் வரலாற்றைக் கூறுகிறது.
மொழிபெயர்ப்புத் தரவுத்தள நூலடைவின் வளர்ச்சி பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்
|
|
|
மூலங்கள்:
|
|
»
|
அனுக்கிருதி (சி.ஐ.ஐ.எல்- சாகித்ய அக்கடெமி & என்பிடி)
|
|
»
|
பாஷா சன்சோதன் கேந்திரா, வடோதரா
|
|
»
|
பிரிட்டிஷ் லைப்ரரியின் ஓரியண்டல் அண்ட் இண்டியா ஆபீஸ்
|
|
»
|
கலெக்சன்ஸ்பல்வேறு வெளியீட்டாளர்களின் நூல்பட்டியல்கள்
|
|
»
|
சென்ட்ரல் ரெப்ரன்ஸ் லைப்ரரி, கொல்கத்தா
|
|
»
|
நேஷனல் பிபிலியோகிராபி ஆப் இண்டியன் லிட்ரச்சர் (NBIL)
|
|
»
|
சௌத் ஆசியன் யூனியன் கேட்டலாக், (யுனிவர்சிட்டி ஆப் சிகாகோ லைப்ரரிஸ் சதர்ன் ஆசிய டிபார்ட்மெண்ட்)
|
|
»
|
யுனேஸ்கோ
|
|
»
|
யுனிவர்சிட்டி ஆப் இலினாய்ஸ், அர்பனா- கேம்பெய்ன். தற்போது என்டிஎம் பல மூலங்களிலிருந்தும்
தகவல்களை சேகரித்து வருகிறது. விரைவில் தரவுத்தளத்தில் ஏற்றுவதற்காக இவை டிஜிட்டல்
மயமாக்கப்படும்.
|
|
நூலடைவின் பாணிகள்
|
நூலடைவுப் பாணிகளைப் பொருத்தவரை, பல்வேறு மூலங்கள் பல்வேறு வகையான முறையைக் கொண்டிருக்கின்றன.
பரவலாகப் பயன்படுத்தப்படுகிற இரண்டு வழிமுறைகள் எம்எல்யே (Modern Language Association-MLA)
மற்றும் ஏபிஏ (American Psychological Association-APA) ஆகும். எம்எல்ஏ பாணியானது ஆராய்ச்சி
வளங்கள் அல்லது பல்வேறு தலைப்புகளில் நூலடைவை உருவாக்குவதில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டமும் இந்த முறையைப் பின்பற்றுகிறது, இதனுடன் தனி அடையாள
எண் முறையும் சேர்க்கப்பட்டுள்ளது.
|
NTMஆல் உருவாக்கப்பட்டுள்ள நூலடைவின் சிறப்பு அம்சங்கள்
|
NTM ஆல் உருவாக்கப்பட்டுள்ள நூலடைவானது இலக்கியம் மற்றும் இலக்கியம் அல்லாத மொழிபெயர்ப்பு
நூல்கள் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்துகிறது. மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளில்,
அவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்,
வெளிவந்துள்ள மொழிபெயர்ப்புகளையும் கண்டறிந்து இடம்பெறச் செய்ய முயல்கிறது.
|
இந்திய மொழிகள் தவிர மற்ற மொழிகளிலிருந்தும் இந்திய மொழிகளிலிருந்து மற்ற மொழிகளுக்கும்
மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூல்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் செயல்பாடும் இந்த
திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த நூலடைவின் வாயிலாக என்டிஎம் தனிப்பட்ட அடையாள எண்ணை வழங்க திட்டமிட்டிருக்கிறது.
இது ISTN (Indian Standard Translation Number) என்று அழைக்கப்படும். இது இந்திய மொழிகளில்
மொழிபெயர்க்கப்படும் நூல்களுக்கு வழங்கப்படும். பல்வேறு இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள
மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்வதற்காகவே ISTN உருவாக்கப்படுகிறது.
இது ஆய்வாளர்கள், கல்வியாளார்கள், அறிவு கோருபவர்கள் ஆகியோர் கொடுக்கப்பட்ட மொழியில்
வெளிவந்திருக்கும் நூல்களின் எண்ணிக்கை, குறிப்பிட்ட பாடப்பிரிவு, வெளிவந்த ஆண்டு முதலிய
விபரங்களை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
இந்த தரவுத்தளத்தை அனைவரும் எளிதில் அணுகும் வகையில் இணையம் சார்ந்ததாக என்டிஎம் அமைத்திருக்கிறது.
தரவுத்தளத்திற்குப் புதிய தகவல்களைக்கொடுத்து மேம்படுத்தவும் இது வாய்ப்புகளை வழங்கும்.
|
தரவுத்தளத்தில் இல்லாத மொழிபெயர்ப்பு பற்றிய தகவல் உங்களிடம் இருந்தால், நீங்கள் என்டிஎம்மிற்கு
கொடுத்து தரவுத்தளத்தில் சேர்க்க உதவ அழைக்கிறோம். ஒரு பயனர் கணக்கை தொடங்கி மொழிபெயர்ப்புகள்
தொடர்பான தகவல்களை நீங்களாகவே பதிவுசெய்யலாம். மேலும் ntmciil@gmail.com என்ற முகவரிக்கும்தகவல்களை
நீங்கள் அனுப்பலாம். அவை என்டிஎம்-ஆல் தரவுத்தளத்தில் சேர்க்கப்படும்.
|
|
நீங்கள் ஒரு வெளியீட்டாளர் எனில், பயனர் உள்ளீட்டைப் பயன்படுத்தி உங்களுடைய சமீபத்திய
மொழிபெயர்ப்பு பற்றிய தகவல்களை நேரடியாக நீங்களே பதிவு செய்யலாம். மேலும் நீங்கள் ntmciil@gmail.com நீங்கள் ஒரு வெளியீட்டாளர் எனில், பயனர் உள்ளீட்டைப்
பயன்படுத்தி உங்களுடைய சமீபத்திய மொழிபெயர்ப்பு பற்றிய தகவல்களை நேரடியாக நீங்களே பதிவு
செய்யலாம்.
|
நூலடைவுத் தேடல்
|
இந்திய மொழிகளில் உள்ள மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றிய தகவல்களை அறிய இங்கே தேடவும்.
Search here
|
|
|