|
இந்திய பல்கலைகழகங்கள் தரவுத்தளம்
இந்திய பல்கலைகழகங்கள் தரவுத்தளம் இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைகழகங்கள் மற்றும்
பிற கல்வி நிறுவனங்கள் பற்றிய தகவல்களை கொடுப்பதற்கென என்டிஎம்மால் தொடங்கப்பட்ட ஒன்று.
பல்கலைகழகங்களில் கற்பிக்கப்படும் பாடப்பிரிவுகள், பாடத்திட்டங்கள், பாட நூல்கள் மற்றும்
குறிப்புதவி நூல்கள் பற்றிய தகவல்களை இந்த தரவுத்தளம் அளிக்கும். எண்ணியல்முறை படுத்தப்பட்ட
பரிந்துரைக்கப்பட்டுள்ள புத்கங்களின் பெயர்கள், அவற்றின் ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்களின்
பெயர்களுடன் இந்த தகவல் தொகுதியில் பட்டியலாகக் கிடைக்கும். பட்டியலில் இருக்கும் நிறுவனங்களின்
இணையதள முகவரியையும் ஒருவர் இங்கிருந்து பெற முடியும். பல்கலைக்கழக மானியக் குழுவால்
(University Grants Commission) அங்கீகரிக்கப்பட்டுள்ள 155 இந்தியப் பல்கலைக்கழகங்கள்
பற்றிய விவரங்கள் இந்தத் தரவுத்தளத்தில் தற்போது உள்ளன.
நாட்டில் உள்ள எந்த நிறுவனத்தின் பாடத்திட்டம் மற்றும் பாடப்பிரிவைப் பற்றிய சமீபத்திய
தகவல்களை ஆய்வாளர்களும், கல்வியாளர்களும் அறிந்துகொள்ள இந்த தரவுத்தளத்தில் உள்ள ‘தேடுதல்’வசதி
உதவும். பல்கலைகழக குழுக்கள் தங்களுடைய பல்கலைகழகத்தில் பாடத்திட்டத்தை மறு ஆய்வு செய்து
மாற்றுவதற்கு முன்பு மற்ற பல்கலைகழகங்களின் பாடப்பிரிவு மற்றும் பாடத்திட்ட அமைப்பு
விவரங்களைப் புனராய்வு செய்து கொள்ளலாம். இவ்வகை முயற்சிகள் ஊரக மற்றும் நகர்புற பல்கலைகழகங்களுக்கிடையே
ஒரு சமநிலையை உருவாக்க உதவும். இதில் ஆர்வமுள்ளவர்கள் எளிதில் பெற்றுக்கொள்ளும் வகையில்
தரவுத்தளத்தை கையடக்கமான குறுந்தட்டுகள் அல்லது அச்சுப்பிரதிகளாகவும் வரும் நாட்களில்
என்டிஎம் வெளியிடலாம்.
|
|
|