தகவல் பாதுகாப்பு

தேசிய மொழிபெயர்ப்புத் திட்டமானது (“the Mission”) உங்களுடைய தனியுரிமையைப் பாதுகாக்க உறுதியளித்திருக்கிறது. திட்டத்தின் இணையத்தளத்தை www.ntm.org.in (the “Site”) பார்வையிடுபவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களிடமிருந்து எவ்வாறு தகவல்களைப் பெற்று பயன்படுத்துகிறோம், பாதுகாக்கின்றோம் என்பதைப் புரிந்துகொள்ள தயவுசெய்து கீழ்வரும் தனியுரிமைக் கொள்கையைப் படிக்கவும்.

இந்த தளத்தைப் பயன்படுத்துவதன் மூலமாக உங்களுடைய தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்க/ தொடர்ந்து வைத்திருக்க மற்றும் பயன்படுத்த இந்த தனியுரிமைக் கொள்கையின்படி சம்மதிக்கிறீர்கள்.
 

உங்களிடமிருந்து நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்

We collect information about you:
  » எங்களின் இணையத்தளம் வாயிலாக உங்களைப் பதிவு செய்யும்போது அல்லது விவரங்கள் கேட்கப்படும் போது நீங்கள் கொடுக்கும் உங்கள் சுய விவரங்கள் (உங்கள் பெயர், தொடர்புகொள்ளும் முகவரி, மின் அஞ்சல் முகவரி முதலியன) கொடுக்கும்போது
  » ஆய்வு நோக்கத்திற்காக நாங்கள் உங்களைக் கள ஆய்வை முடிக்குமாறு கேட்கும்போது நீங்கள் பதிலளிக்கும்போது; மற்றும்
  » இந்திய பல்கலைகழகங்களின் தரவுத்தளம், மொழிபெயர்ப்பாளர்களுக்கான தேசிய பதிவேடு (NRT) , வெளியீட்டாளர்கள் பதிவேடு, மொழிபெயர்ப்புகள் நூலடைவு, ஆசிரியர்கள்/ வல்லுநர்கள் தரவுத்தளம், அகராதிகள் மற்றும் கலைச்சொற்கள் தரவுத்தளம் என ஐந்து தரவுத்தளங்களின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பின் போது உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம்.
 

உங்களுடைய தகவல்களின் பயன்பாடு

We use your information:
  » தாங்கள் கேட்டிருக்கிற பொருள்கள், சேவைகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு அளிப்தற்கு உதவ;
  » உங்களுக்கும் உங்களுடைய கணினிக்கும் இந்த தளத்திலிருந்து வரும் உள்ளடக்கம் மிகவும் சிறந்த முறையில் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை உறுதிசெய்ய
  » இந்த தளத்தை நிர்வகிக்க, ஊக்கமளிக்க மற்றும் மேம்படுத்தவற்காகவும் விரிவுபடுத்துவதற்காகவும் நாங்கள் சேகரித்திருக்கிற தகவல்களை ஆய்வு செய்ய
  » எங்களிடமிருந்து நீங்கள் கேட்ட தகவல், பொருட்கள் அல்லது சேவைகளை உங்களுக்கு வழங்க அல்லது உங்களை இது கவரலாம் என்று நாங்கள் எண்ணுகிற, இந்த நோக்கங்களுக்காக நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்ளலாம் என நீங்கள் ஒப்புதல் அளித்திருக்கிறவைகளுக்கு
  » எங்களுடைய சேவைகளில் மாற்றங்கள் ஏற்படின் அதைத் தெரிவிக்க
 
நாங்கள் உங்களை அஞ்சல், தொலைபேசி அல்லது தொலைநகல் அதே போன்று மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். எதிர்காலத்தில் இது போல் நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்வதில் உங்களுக்கு ஆட்சேபனை ஏற்பட்டால் தயவுசெய்து எங்களுக்கு தெரியப்படுத்தவும்.
 

உங்களுடைய தகவல் சேமிப்பு

இந்த தளத்தின் சில பகுதிகளை அணுகுவதற்கு உதவும் கடவுச்சொல்லை நாங்கள் கொடுத்திருக்கிறோம் (அல்லது நீங்கள் தெரிவு செய்திருக்கிறீர்கள்). இதை இரகசியமாக வைத்திருப்பது உங்களுடைய பொறுப்பாகும். கடவுச்சொல்லை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

துரதிஷ்டவசமாக, இணையம் வழியாக தகவல்களைப் பரப்புவது முழுமையான பாதுகாப்பு இல்லாதது ஆகும். உங்களுடைய தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க எங்களால் முடிந்தவரை முயன்றாலும், இந்த தளத்தின் வழியாக பரப்புவதைப் பாதுகாக்க எங்களால் உறுதியளிக்க முடியாது; எந்த பரப்புதலும் உங்களுடைய சொந்த விருப்பம் ஆகும். உங்களுடைய தகவல்களை நாங்கள் பெற்ற உடனேயே, அனுமதியற்ற அணுகலைத் தடுப்பதற்கு நாங்கள் கடுமையான முறைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்துவோம்.
 

உங்களுடைய தகவல்களை வெளிப்படுத்துதல்

நீங்கள் எங்களுக்கு அளித்துள்ள தகவல்களை எங்கள் திட்டத்தில் பணியாற்றுகிற, அனுமதிக்கப்பட்ட அலுவலரால் அதைப் பெறமுடியும். என்டிஎம்மின் கொள்கையில் விளக்கப்பட்டிருக்கும் நோக்கத்திற்காக செயல்படுகிறவர்கள் அல்லது உங்களால் ஏற்றுகொள்ளப்பட்ட நோக்கங்களுக்காகச் செயல்படும் மூன்றாவது நபர்களுக்கு நாங்கள் உங்களுடைய தகவல்களைச் சொல்லலாம்.

இந்த தனியுரிமைக் கொள்கையின்படிதான் உங்களுடைய தகவல்கள் மூன்றாவது நபர்களால் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்ய நாங்கள் எப்போதும் நடவடிக்கைகள் எடுப்போம்.

தேவைப்பட்டாலொழிய அல்லது சட்டத்தால் செய்ய அனுமதிக்கப்பட்டாலோ உங்களுடைய சம்மதம் இல்லாமல், உங்களுடைய எந்தத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவோ, விற்கவோ அல்லது விநியோகிக்கவோ மாட்டோம்.
 

இணைய விதிமுறை முகவரிகள் மற்றும் விரைவிகள்

இணைய விதிமுறை முகவரி இருக்குமிடம், இயக்க அமைப்பு மற்றும் தேடுபொறி வகை போன்ற உங்களுடைய கணினியைப் பற்றிய தகவல்களை நாங்கள் சேகரிக்கலாம். இந்தத் தகவலானது பயனர்களின் தேடுதல் செயல்பாடுகள் மற்றும் மாதிரிகள் பற்றிய புள்ளியியல் தரவுகளுக்கானதேயன்றி எந்த ஒரு தனிநபரைப் பற்றிய அடையாளம் காண்பதற்கானது அல்ல. இது இணையதள மேம்பாட்டிற்கு தகவல்களை அளிப்பதற்கும், கணினி நிர்வாகத்திற்கும் மற்றும் மூன்றாம் தரப்பினர்களுக்கு ஒட்டுமொத்த தகவல்களை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

உங்களது கணினியின் வன் தட்டில் சேமித்து வைக்கப்பட்டுள்ள விரைவி கோப்புகளைப் பயன்படுத்தி உங்களுடைய பொதுவான இணையத்தள பயன்பாட்டுத் தகவல்களை அதே புள்ளியியல் தரவுக்கான காரணங்களுக்காக நாங்கள் பெறலாம். இந்த தளத்தின் மூலமாக உங்களுடைய இயக்கங்களைக் கண்டுபிடிக்கவும் இந்தத் தளம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்றும் அதனுடைய பயனுடைமையைக் கண்டுபிடிக்கவும் நாங்கள் இந்த தகவல்களைப் பயன்படுத்துகிறோம். இந்தக் கண்காணிப்பு வேலையின்போது உங்களைப்பற்றிய சொந்த விபரங்கள் சேகரிக்கப்படமாட்டாது.
 

பாதுகாப்பு

அனுமதியில்லாமல் பெறும் நபர்களிடமிருந்தும், விதிமுறைக்கு மாறான செயல்பாடுகளுக்கு எதிராகவும், தற்செயலான இழப்பு, அழிவு மற்றும் சேதத்திலிருந்தும் உங்களுடைய தகவல்களை பாதுகாக்க நாங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

உங்களுடைய மின் அஞ்சல் முகவரி மற்றும் மற்ற தொடர்பு முகவரியில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தி எங்களுடைய பதிவேடுகளை மேம்படுத்திக்கொள்ள தயவுசெய்வு உதவவும்.
 

எங்களுடைய தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்கள்

இந்த கொள்கையை அவ்வப்பொழுது நாங்கள் மாற்றம் செய்யலாம். ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நாங்கள் செய்தால், எங்கள் இணைய தளத்தில் முதன்மைச் செய்தியாக அதை வெளியிட்டு உங்களுக்கு தெரியப்படுத்துவோம்.
 

உங்களுடைய உரிமைகள்

எங்களுடைய பதிவேடுகளில் உள்ள தகவல்களின் நகலைக் கேட்பதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. அந்த தகவலைப் பெற நீங்கள் எங்களுக்கு சிறு கட்டணம் செலுத்தவேண்டும்.

இந்த தளம், அவ்வப்பொழுது, மூன்றாம் தரப்பு இணையதளங்களின் இணைப்புகளைக் கொண்டிருக்கலாம். இந்த இணையத் தளங்களின் இணைப்பைப் பின்தொடர்ந்தீர்கள் என்றால், தயவுசெய்து அந்த இணையதளங்கள் தங்களுடைய சொந்த தனியுரிமைக் கொள்கையைக் கொண்டிருக்கின்றனவா என்று பார்க்கவும் மேலும் நாங்கள் அதன் கொள்கைளுக்குப் பொறுப்பேற்கவோ அல்லது கட்டுப்படவோ மாட்டோம். இந்த இணையத்தளங்களில் உங்களுடைய சொந்தத் தகவல்களைக் கொடுப்பதற்கு முன்பு இந்த கொள்கைகளைத் தயவுசெய்து சரிபார்க்கவும்.