திட்டத்தில் பங்கேற்பவர் யார்? நிருவாக அமைப்பு

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (Central Institute of Indian Languages - சிஐஐஎல்) என்டிஎம்மின் மைய ஒருங்கிணைப்பு நிறுவனமாகவும், திட்டத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளைச் செய்துகொடுக்கும் முதன்மை நிறுவனமாகவும் தற்பொழுது செயல்பட்டுவருகிறது. இத்திட்டமும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன அலுவலக வளாகத்திலிருந்துதான் செயல்படுகிறது. இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் இயக்குனர் இத்திட்டத்தின் மைய ஒருங்கிணைப்பாளர் ஆவார் தொடர்புள்ள உயர் அலுவலகங்களிலிருந்து தேவையான அனுமதி பெற்ற பிறகு என்டிஎம் ஒரு சுயாட்சி பெற்ற தனி அமைப்பாக உருவெடுக்கும் என்று எண்ணப்படுகிறது. சாகித்திய அகாதமி, நேஷனல் புக் டிரஸ்ட் (National Book Trust), அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கலைச்சொல்லாக்க ஆணையம், உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் (Center for Development of Advanced Computing - C-DAC) போன்ற தேசிய நிறுவனங்களுடன் என்டிஎம் இணைந்து செயலாற்றுகிறது.

திட்ட ஆலோசனைக் குழு (Project Advisory Committee - PAC) என்ற நிபுணர் குழு என்டிஎம்மிற்கான முடிவுகளை எடுக்கும் தலைமை அமைப்பாகும். மொழிபெயர்ப்பாளர்களாகவோ அல்லது மொழிபெயர்ப்பைக் கற்பிப்பதிலோ ஈடுபட்டுள்ள கல்வியாளர்களும் வல்லுநர்களும்; எழுத்தாளர்களும்; இலக்கியவாதிகளும்; இலக்கியச் சங்கங்களின் தலைவர்களும்; பல்கலைகழகங்களின் துணைவேந்தர்களும்; நூல் விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் கழகங்களின் உறுப்பினர்களும்; இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் பிரதிநிதியும் மற்றும் இந்திய தொழில்நுட்ப கழகங்கள் (Indian Institute of Technology - ஐஐடீ) போன்ற நிறுவனங்களின் பேராசிரியர்கள் என 25 வல்லுநர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

திட்ட ஆலோசனைக் குழுவைத் தவிர, தன் திட்ட இலக்கை செயல்படுத்துவதற்கு ஆலோசனை வழங்க கீழ்கண்ட நான்கு துணைக்குழுக்களை என்டிஎம் கொண்டுள்ளது :
i. விலைகள் நிருணயிப்பதற்கான துணைக்குழு (Sub-committee for Rates)
ii. காப்புரிமை மற்றும் சட்டரீதியான விவகாரங்களுக்கான துணைக்குழு (Sub-committee for Copyright and Legal Matters)
iii. அறிவுசார் நூல்களுக்கான துணைக்குழு (Sub-committee for Knowledge Texts)
iv. நிதியுதவி வழங்குவதற்கான துணைக்குழு (Sub-committee for Grant- in- Aid)
 
திட்ட ஆலோசனைக் குழு (NTM-Project Advisory Committee)
மைய ஒருங்கிணைப்பாளர்: இயக்குநர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்
திட்ட இயக்குநர்
என்டிஎம்மிற்கு அனுமதிக்கப்பட்ட பதவிகள்: 65
துணைப் பணியாளர்கள்