|
இலக்கும் நோக்கமும்
திட்டத்தின் குறுகியகால இலக்குகள்
|
|
»
|
கல்லூரிகளும் பல்கலைகழகங்களும் கற்பிக்கப்படுகிற அனைத்து முக்கியமான பாடத்துறைகளிலும்
அறிவுசார் நூல்களின் மொழிபெயர்ப்புக்களைப் பிரபலப்படுத்துதல் மற்றும் பதிப்பித்தல்
|
|
»
|
இந்திய பல்கலைகழகங்கள் தரவுத்தளம், மொழிபெயர்ப்பாளர்களின் தேசிய பதிவேடு (National
Register of Translators - NRT), வெளியீட்டாளர்கள் தரவுத்தளம், மொழிபெயர்ப்பு நூலடைவுத்
தரவுத்தளம், பேராசிரியர்கள் தரவுத்தளம்/ வல்லுநர்கள் கருவூலம், அகராதிகள் மற்றும் கலைச்சொற்கள்
தரவுத்தளம் ஆகிய ஆறு தரவுத்தளங்களை உருவாக்கிப் பராமரித்தல்.
|
|
»
|
ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளுக்கிடையே இயந்திர உதவி மொழிபெயர்ப்பை பிரபலப்படுத்துதல்
வளர்த்தல்
|
|
»
|
மொழிபெயர்ப்பாளர்களுக்கான சான்றளிப்பும் பயிற்சியும்
|
|
»
|
மொழிபெயர்ப்பாளர்களுக்கான கல்வி திட்டத்தின் கீழ் குறுகிய காலப் புத்தறிவுப்பயிற்சி
வகுப்புகள் நடத்துதல்.
|
|
»
|
அகராதிகள் மற்றும் சொற்களஞ்சியங்கள் போன்ற மொழிபெயர்ப்புக் கருவிகளை உருவாக்குதல்.
|
|
»
|
இந்திய மொழிகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கலைச்சொற்கள் உருவாக்க அறிவியல் மற்றும்
தொழில்நுட்பக் கலைச்சொல்லாக்க ஆணையத்தோடு (Commission for Scientific and Technical
Terminology - CSTT) ஒருங்கிணைந்து செயலாற்றுதல்.
|
திட்டத்தின் நீண்டகால இலக்குகள்
|
|
»
|
மொழிபெயர்ப்பு நினைவகம் (translation memory), வேர்டு பைன்டர் (word-finders), வேர்டுநெட்
(wordnet) முதலிய மென்பொருட்களைப் பற்றிய ஆய்வுகளுக்கும், உருவாக்கத்திற்கும் உதவுதல்
|
|
»
|
இயற்கை மொழி கணினியாய்வுக்கும் (Natural Language Processing) மொழிபெயர்ப்பு தொடர்பான
ஆராய்ச்சித் திட்டங்களுக்கும் ஆதரவூதியமும் நிதியுதவியும் அளித்தல்.
|
|
»
|
மொழிபெயர்ப்பில் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்புகளை நடத்துவதற்காக பல்கலைக்கழகங்கங்களுக்கும்
துறைகளுக்கும் அல்லது இரு மொழிகளுக்கிடையேயான மொழிபெயர்ப்புக் கையேடுகள் தயாரித்தல்
போன்ற குறிப்பிட்ட திட்டங்களுக்கும் நிதியுதவிகளை வழங்குதல்.
|
|
»
|
இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு ஆய்விதழ்களையும், மொழிபெயர்ப்புத் தொடர்பான ஆய்வுகளையும்
நூல்களையும் வெளியிடுவதற்கு உதவுதல்
|
|
»
|
மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டுவிழா, மண்டல மொழிபெயர்ப்புத் திருவிழாக்கள், கலந்துரையாடல்கள்,
புத்தகக் கண்காட்சிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதன் மூலம் மொழிபெயர்ப்பாளர்களையும்
மொழிபெயர்ப்பு செயல்பாடுகளையும் மக்களிடம் அறிமுகப்படுத்துதல்.
|
|
»
|
மொழிபெயர்ப்பியலில் முதன்மையான கல்வி நூல்களையும் ஆய்வுப் படைப்புக்களையும் திரட்டி
அத்துறையில் சிறப்பான சொல்லாடல்களும் உரையாடல்களும் உருவாக வழிவகுத்தல்
|
|
»
|
மொழிபெயர்ப்பை வருமானம் வரும் வாழ்க்கைத்தொழிலாக மாற்றி, ஒரு மொழிபெயர்ப்புத் தொழில்துறையை
உருவாக்குதல்
|
பயனாளிகள்
|
அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் ஓர் அறிவுசார் சமூகத்தை உருவாக்குவதே என்டிஎம்மின் எண்ணம்.
முக்கியமான முன்னோடி நூல்களை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்க உதவுவதன்மூலம்
சமமான அறிவுப்பகிர்தலை ஊக்குவிக்க இத்திட்டம் முற்படுகிறது. அறிவை பெற மொழி ஒரு தடையாக
இருக்கும் மாணவர்களுக்கு இது உதவியாக இருக்கும். சமூகத்தில் பலதரப்பு மக்களுக்கும்
பெருவாரியாக உதவுவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
|
|
»
|
பல்வேறு மட்டங்களில் உள்ள பல்வேறு பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள்
|
|
»
|
நூலாசிரியர் / மொழிபெயர்ப்பாளர்கள் / வெளியீட்டாளர்கள்
|
|
»
|
பல்வேறு பல்கலைகழகங்களையும் நிறுவனங்களையும் சார்ந்த மொழிபெயர்ப்பியல், மொழியியல் துறைகள் மற்றும் ஆய்வாளர்கள்
|
|
»
|
இந்திய மொழிகளில் புதிய, சுவாரசியமான முயற்சிகளில் இறங்க விரும்பும் வெளியீட்டாளர்கள் |
|
»
|
மொழிபெயர்ப்பிற்குத் தேவையான மென்பொருள்களைத் தயாரிப்பவர்கள்.
|
|
»
|
ஒப்பிலக்கியத் துறை கற்றறிவாளர்கள்
|
|
»
|
தங்களது சொந்த மொழியில் இலக்கியங்களையும், அறிவுசார் நூல்களையும் படிக்க ஆர்வமாயுள்ள வாசகர்கள்
|
|
»
|
முறைசாராகல்வி பரப்புதலில் ஈடுபட்டுள்ள தன்னார்வத் தொண்டர்கள்
|
|
»
|
மனித உரிமைகள், பொதுச் சுகாதாரம், சுற்றுச்சூழல், அறிவியலைப் பிரபலப்படுத்துதல் ஆகிய இலக்குகளுக்காகப் பாடுபடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்
|
|
»
|
மொழிபெயர்த்துரைப்பவர்கள் (interpreters) தேவைப்படும் அரசு அல்லது தனியார் நிறுவனங்களும் தனிநபர்களும்
|
|
»
|
மொழிமாற்றம் செய்து அல்லது வசனவரிகளுடன் வெளியிட விரும்பும் திரைப்படத் தயாரிப்பாளர்கள்,
|
|
»
|
பல்வேறு மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப விரும்பும் FM மற்றும் பிற வானொலி நிறுவனங்கள்
|
|
|
|
|