|
ஒலி-ஒளிப் பாடங்கள்
என்டிஎம்மின் ஊடகப் பிரிவு மொழிபெயர்ப்பாளர்களின் கல்வித் திட்டத்திற்காக ஒலி-ஒளிப்
பாடங்களை வடிவமைத்திருக்கிறது. மொழிபெயர்ப்பியலின் வரலாற்றில் தொடங்கி மொழிபெயர்ப்பியல்
கோட்பாடு மற்றும் மாதிரி வரை மொழிபெயர்ப்பியலின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்குவது இதன்
நோக்கமாகும். இதைத் தவிர, என்டிஎம் ஊடகத்தினர் மொழிபெயர்ப்பியலில் இந்தியக் கோட்பாடுகள்,
மொழிபெயர்ப்பியலில் உரைநடை வகை, மொழிபெயர்ப்பில் மொழி மாறலும் மொழிக்கலப்பும் மற்றும்
இருவேறுபட்ட பொருட்குறி மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கிறது.
இந்த கருத்துருக்கள் அவற்றின் விவரங்களோடு தொடர்புடைய எடுத்துக்காட்டுகள் மற்றும் நிகழ்வுகளோடு
மிகவும் சுவாரசியமாகச் சொல்லப்பட்டு நிகழ்ச்சிகளாகத் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
|
|
|