அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

1. என்டிஎம்மில் நான் எப்படி பங்குகொள்வது? என்டிஎம்மின் மொழிபெயர்ப்பாளராகப் பதிவுசெய்ய நான் விரும்புகிறேன். ஒரு இளங்கலை மாணவராக எப்படி என்டிஎம்மில் நான் எப்படிப் பதிவுசெய்வது?
பதில். உங்களுடைய விரிவான சுயவிவரத்தை இந்த முகவரியில் சென்று சமர்பிக்கவும். http://www.ntm.org.in/languages/english/login.aspx. எங்களிடமிருந்து விரைவில் உங்களுக்கு அழைப்பு வரும் என்று உறுதியளிக்கிறோம்.

2. ஒரு குறிப்பிட்ட நூலை மொழிபெயர்த்து வெளியிட நான் விரும்புகிறேன். என்டிஎம்மின் கீழ் இதை எவ்வாறு செய்வது?
பதில். உங்களுடைய மாதிரி வேலையுடன் விரிவான திட்ட முன்வரைவை சமர்பிக்கவும். எங்களுடைய குழு அதை மதிப்பீடு செய்து அவர்களுடைய வல்லுநர் பதில்களை உங்களுக்குத் தெரியப்படுத்தும்.

3. என்டிஎம்- உடன் தொடர்புடைய முற்படு தேவைகள் என்ன?
பதில். என்டிஎம் தன்னுடைய மொழிபெயர்ப்பாளர்களின் தேவையில் தனித்தன்மையுடையது. மூல மொழி மற்றும் இலக்கு மொழியில் உள்ள உங்களுடைய திறன் மற்றும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் மொழிபெயர்ப்பை முடிக்கும் உங்கள் திறமை என இதை விட வேறு எதையும் உங்களிடமிருந்து என்டிஎம் எதிர்பார்க்கவில்லை. வயது, தகுதி, இருப்பிடம் போன்றவை எதிர்கால மொழிபெயர்ப்பாளர்களுக்கு என்டிஎம்மில் ஒரு தடையாக இருக்காது.

4. நான் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கிறேன். என்னால் இன்னும் என்டிஎம்மோடு தொடர்புகொள்ள முடியுமா?
பதில். மொழிபெயர்ப்பின் மீது ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவிப்பதற்காகவும் மொழிபெயர்ப்புத் துறையை வளர்ச்சியடைய செய்வதற்காகவும் என்டிஎம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு இருப்பிடம் ஒரு தடை இல்லை. உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் நீங்கள் இந்தத் திட்டத்தில் உங்கள் பங்களிப்பை அளிக்க முடியும்.

5. பல்லூடக மொழிபெயர்ப்பு என்றால் என்ன?
பதில். பெருமளவில் எழுதப்பட்டுள்ளதும் பேசப்பட்டுள்ளதுமான ஆவணங்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன அல்லது விளக்கப்பட்டிருக்கின்றன. பல்லூடக மொழிபெயர்ப்பானது மேலே குறிப்பிட்டுள்ள இரண்டுதலைப்புகளில் சேராத அனைத்தையும் உள்ளடக்கியது. ாஎடுத்துக்காட்டாக, வருணனை, குரல் மொழி பரப்பல் (வாய்ஸ் ஓவர்), மேலும் வசன வரிகளிடல், இணையதள மொழிபெயர்ப்பு மற்றும் பன்மொழி கணினிவழி வெளியீடு போன்றவை பல்லூடக மொழிபெயர்ப்பின் கீழ் வரும்.

6. உங்களுடைய மொழிபெயர்ப்புத் திட்டங்களில் வாய்ஸ் ஓவர் மற்றும் வருணனை ஒரு பகுதியாக இருக்குமா?
பதில். வாய்ஸ் ஓவர் மற்றும் வருணனைகளைக் கொண்டு ஆவணப்படங்கள் மற்றும் திட்டங்களை சிஐஐஎல் பெரிய அளவில் தயாரித்திருக்கிறது. இந்த செயல்முறைகளுக்கு உதவுவதற்காக இந்த நிறுவனம் தன்னுடைய கட்டடத்தில் தொழில்முறை ஸ்டூடியோ ஒன்றை நிறுவியுள்ளது. எனவே, எந்த திட்டங்களுக்காவது இந்த குறிப்பிட்ட கருவிகள் தேவைப்பட்டால், என்டிஎம் நிச்சயமாக இவைகளைப் பயன்படுத்தும்.

7. நீங்கள் ஏதாவது மொழிபெயர்ப்பு கருவிகளைப் பயன்படுத்தப் போகிறீர்களா?
பதில். அகராதி, மொழிபெயர்ப்பு ஆதார மென்பொருள், வோர்ட்நெட் போன்ற உயர்தரக் கருவிகளை உருவாக்குவது என்டிஎம்மின் நோக்கங்களில் ஒன்றாகும். இவைகளிலிருந்து பயன்பெறுபவர்கள் அனைவருக்கும் இந்த கருவிகளை கிடைக்கச் செய்யப்படும்.

8. ஒரு நூலை மொழிபெயர்க்கும் போது நான் எந்த முறையைப் பின்பற்ற வேண்டும்?
பதில்.

9. மொழிபெயர்ப்பிற்கான மதிப்பீட்டை நான் எப்படி பெறுவேன்?
பதில்.

10. தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஏதேனும் படிப்பு அல்லது பயிற்சி கொடுக்கத் திட்டம் இருக்கிறதா?
பதில். இந்தச் செயலுக்கு பிரத்தியேகமான பயிற்சி அவசியம் என்பதால், மொழிபெயர்ப்பாளர்களுக்கான கல்வி என்பது என்டிஎம்மின் முதன்மையான நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. குறுகியகால பயிற்சி நிகழ்ச்சிகள், பாட மாதிரிகள் மற்றும் மொழிபெயர்பாளர்களுக்கான தொகுப்புகளைத் தயாரித்தல், மொழிபெயர்ப்புத் தொழில்நுட்பத்தில் உள்ள பிரத்தியேக படிப்புகளுகளின் வளர்ச்சிக்கு உதவுதல், ஊக்குவித்தல், ஆதரவு அளித்தல், ஆய்வு திட்டங்களை ஊக்குவித்தல், ஆய்வுதவித் தொகைத் திட்டத்தை ஏற்பாடு செய்தல், பணிப்பட்டறைக்கு ஏற்பாடு செய்தல் இது போன்ற பலவற்றிற்கு ஏற்பாடு செய்து மொழிபெயர்ப்பாளர்கள் கூர்ந்தாய்வு, திருத்துதல் மற்றும் தொகுத்தல் போன்றவற்றைச் செய்ய உதவுவதன் மூலம் என்டிஎம் எதிர்கால மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவுகிறது.

11. என்னுடைய விருப்பத்தில் ஒரு நூலை மொழிபெயர்க்கலாமா? அல்லது நூலும், விருப்பத்தேர்வு என இரண்டையும் எனக்கு வழங்குமா?
பதில். என்டிஎம்மின் அறிவுசார் நூல்களின் தரவுத்தளம் மொழிபெயர்ப்பு நூல்களுக்கு ஆதாரமாக இருக்கும்.