|
தரவுத்தளங்கள்
மொழிபெயர்ப்பாளர்களின் தேசிய பதிவேடு, இந்திய பல்கலைகழகங்கள் தரவுத்தளம், பேராசிரியர்கள்
தரவுத்தளம்/ வல்லுநர்கள் கருவூலம், வெளியீட்டாளர்கள் தரவுத்தளம், மொழிபெயர்ப்பு நூலடைவுத்
தரவுத்தளம், அகராதிகள் மற்றும் கலைச்சொல்லடைவுகள் (glossaries) தரவுத்தளம் ஆகிய ஆறு
தரவுத்தளங்களை என்டிஎம் உருவாக்கியுள்ளது. இந்த தரவுத்தளங்கள் இந்திய மொழி மொழிபெயர்ப்பாளர்கள்;
முக்கியமான பல்கலைகழகங்கள் மற்றும் அதனுடைய பாடத்திட்டங்கள்; பல்வேறு பாடத்துறைகளைச்
சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் வல்லுநர்கள்; அனைத்து இந்திய மொழிகளிலும் உள்ள சிறந்த
வெளியீட்டாளர்கள்; இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்கள்; அகராதிகள், கலைச்சொற்கள்
மற்றும் சொற்களஞ்சியங்கள் ஆகியவை பற்றிய தகவல்களை தருகின்றன. இந்த தரவுத்தளங்கள் தேசிய
மொழிபெயர்ப்புத் திட்டத்தின் செயல்களுக்கு மட்டுமின்றி பல துறைகளைச் சார்ந்த மாணவர்களுக்கும்,
ஆய்வு மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும், கற்றறிவாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும்,
மொழிபெயர்ப்பாளர்களுக்கும் கூட மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
|
|
|