சான்றளித்தலும் மொழிபெயர்ப்பாளர்களுக்கான பயிற்சியும்

திட்ட விவர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப்போல் நாட்டில் மொழிபெயர்ப்பை ஒரு தொழில்துறையாக உருவாக்குவதற்கான என்டிஎம்மின் செயல்திட்டங்களில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு சான்றளிப்பதும் ஒன்றாகும். மொழிபெயர்ப்பாளர்களுக்கு வெகுஜன விளம்பரத்தை கொடுப்பதில் இது உதவும் என என்டிஎம் நம்புகிறது.

5000 மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்ட மொழிபெயர்ப்பாளர்களுக்கான தேசிய பதிவேட்டையும் என்டிஎம் பராமரித்து வருகிறது. பல்வேறு மொழிகள் மற்றும் துறையைச் சார்ந்த வல்லுநர்களைக்கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் மொழிபெயர்பாளர்களுக்கான அநேகமான புத்தறிவுப்பயிற்சி வகுப்புக்களை என்டிஎம் நடத்தியுள்ளது. அவர்களிடமிருந்து பின்னூட்டமும் பெறப்பட்டுள்ளது

மொழிபெயர்ப்பாளர்களுக்கு சான்றளித்தல் மற்றும் பயிற்சியிளித்தலில் ஈடுபட்டுள்ள இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் (Indira Gandhi National Open University - IGNOU) மொழிபெயர்ப்பியல் மற்றும் பயிற்சி புலம் (School of Translation Studies and Training – SOTST), இந்திய தர ஆணையம் (Quality Council of India - QCI) போன்றவர்களுடன்/ நிறுவனங்களுடன் என்டிஎம் தற்பொழுது ஆலோசித்து வருகிறது. சான்றளிப்புத் திட்டம் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் முகமைகளைச் சார்ந்த வல்லுநர்கள் பங்குகொண்ட இரண்டு விடைகாணும் விவாதக் கூட்டங்களை என்டிஎம் நடத்தியிருக்கிறது. சான்றளிக்கும் வகைகளும் வழிகளும் இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும்.

மொழிப்பெயர்ப்பாளர்கள் பயிற்சி திட்டம் ஒன்றையும் ஏற்படுத்த என்டிஎம் திட்டமிட்டு வருகிறது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஏற்கனவே உள்ள மொழிபெயர்ப்பாளர்களுக்கான பயிற்சி திட்டங்களின் பாடத்திட்டத்தையும் பாடக்கருப்பொருளையும் என்டிஎம் சேகரித்து வருகிறது. பயிற்சித் திட்டத்தை வடிவமைப்பதற்காக பல்வேறு நிறுவனங்களுடனும் வல்லுநர்களுடனும் இணைந்து செயலாற்றுகிறது. ஒரு நாடுதழுவிய பயிற்சி திட்டம் வருங்காலத்தில் தொடங்கப்படும்.