அறிவுசார் நூல்கள்

உயர்கல்வியில் பயன்படுத்தப்படும் அனைத்துப் பாடநூல்களும் என்டிஎம்மால் அறிவுசார் நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன. மொழிபெயர்ப்பதன் மூலம் இந்த அறிவுசார் நூல்களை இந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வது தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் (NTM) முக்கியமான இலக்குகளில் ஒன்றாகும்.

கல்லூரி/ பல்கலைக்கழக் கல்வியில் வெவ்வேறு அறிவுத்துறைகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்து அடிப்படையான பாடநூல்கள், ஆதார நூல்கள் மற்றும் கட்டுரைகள் போன்றவை மொழிபெயர்ப்புக்கு எடுத்துகொள்ளப்படும். இயற்கை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்பிரிவுகளுக்குச் சிறப்பு கவனம் கொடுக்கப்படும்.

உயர்கல்வியில் உள்ள 69 முக்கிய அறிவுத்துறைகளை என்டிஎம் மொழிபெயர்ப்பிற்காகத் தேர்வு செய்துள்ளது. இந்தப் பாடப்பிரிவுகள் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழுவினால் (AICTE) அங்கீகரிப்பட்டுள்ளது. பாடப்பிரிவுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. வயது வந்தோர்/ தொடர்கல்வி (அன்ட்ராலாஜி/ முறைசாராக் கல்வி) 36. மனையியல்
2. மானிடவியல் (இயற்பொருள்) 37. மனித உரிமைகள் மற்றும் கடமைகள்
3. மானிடவியல் (சமூகம்) 38. தகவலியல் (நூலகம் மற்றும் தகவல் அறிவியல் உட்பட)
4. அராபியப் பண்பாடு மற்றும் இஸ்லாமியக் கல்வி 39. பன்னாட்டு உறவுகள் மற்றும் பரப்பிடம் பற்றிய கல்வி
5. தொல்பொருளியல் (நாணயவியல் உட்பட) 40. இதழியல், ஊடகக் கல்வி மற்றும் பொருண்மையியல் (அ) மக்கள் செய்தித் தொடர்பியல்
6. கட்டடவியல் 41. தொழிலாளர் நலன், பணியாளர் மேலாண்மை (மனித வள மேம்பாடு), தொழில் உறவுகள்
7. வான் இயற்பியல் 42. சட்டம்
8. உயிர் இயற்பியல் 43. மொழியியல்
9. உயிர் வேதியியல் 44. மேலாண்மை
10. உயிர் தொழில்நுட்பவியல் 45. சுவடியியல்
11. தாவரவியல் (பொது) 46. கணிதம்
12. வேதியியல் 47. மருத்துவ அறிவியல் (எம்பிபிஎஸ்)
13. வணிகவியல் 48. நுண்ணுயிரியல்
14. ஒப்பியல் இலக்கியம் 49. பொருட்காட்சிசாலை மற்றும் பாதுகாத்தல்
15. கணிப்பொறியியல் மற்றும் பயன்பாடு (செயற்கை நுண்ணறிவு, எந்திர மனிதர் தொழில் நுட்பம்) 50. இசைத்துறை ஆர்வப்பயிற்சிமுறை
16. குற்றவியல் மற்றும் தடயவியல் 51. அமைதி/ காந்தியச் சிந்தனைகள்
17. பண்பாட்டியல் (இந்தியப் பண்பாடு உட்பட) 52. பயன்பாட்டுக் கலைகள் (நடனம், கூத்து, நாடகக் கலை)
18. தண்னாள்வியல் 53. தத்துவ இயல்
19. பாதுகாப்பு மற்றும் உத்தியியல் 54. உடற்கல்வி
20. வணிகவியல் 55. இயற்பியல் (பொது)
21. கல்வி 56. கவிதையியல்
22. பொறியியல் -வான்செலவுத் துறை (ஏவியானிக்ஸ் உட்பட) 57. அரசியல் அறிவியல்
23. பொறியியல் -வேதிப்பொருள் (மட்பாண்டத் தொழில், பல்படியாக்கல் தொழில்நுட்பம் உட்பட) 58. மக்கள்தொகை கல்வி
24. பொறியியல் - குடிமுறைப் பொறியியல் அல்லது பொதுப்பொறியியல் 59. உளவியல்
25. மின்பொறியியல் 60. பொது நிர்வாகம்
26. மின்னணுப் பொறியியல் (தொலைத்தொடர்பு உட்பட) 61. சமயவியல், சமயங்களுக்கிடையேயான ஒப்பாய்வு
27. எந்திரப் பொறியியல் (கருவியியல், விசையியல், தானியங்கிப் பொறியியல்) 62. சமூக மருத்துவம் மற்றும் சமூக சுகாதாரம்
28. சுற்றுச்சூழல் அறிவியல் (சுற்றுச்சூழல் பொறியியல் உட்பட) 63. சமூக சேவை
29. இனப் பண்பாட்டு இயல் 64. சமூகவியல்
30. திரைப்படவியல் 65. சுற்றுலா நிர்வாகம் மற்றும் மேலாண்மை
31. நாட்டுப்புறவியல் (நாட்டுப்புற இலக்கியம் மற்றும் பழங்குடியினர் இலக்கியம் உட்பட) 66. மொழிபெயர்ப்பியல்
32. மரபியல், இனமேம்பாட்டியல், மரபியல் தொழில்நுட்பம் 67. கவின்கலைகள் (ஓவியக்கலை, சிற்பக்கலை, விளக்கக்குறிவரைக் கணிப்பியல், பயன்பாட்டுக் கலை, கலைகளின் வரலாறு உட்பட)
33. புவியியல் 68. மகளிர் கல்வி
34. நிலவியல் 69. விலங்கியல் (பொது)
35. வரலாறு (பொது)