|
மொழிபெயர்ப்பு வேலைகள்
நாடு முழுவதும் உள்ள வெளியீட்டாளர்களுடன் இணைந்து என்டிஎம் இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்புகளை
வெளியிடுகிறது. இந்த வெளியீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நூல்களுக்கான காப்புரிமை
பெற்றிருப்பவர்களாகவோ அல்லது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்திய மொழிகளில் நூல்கள்
வெளியிடுபவர்களாகவோ இருப்பார்கள். மொழிபெயர்க்கப்பட்ட நூல்களைச் சந்தைபடுத்தவும் விநியோகிக்கவும்
இத்தகைய வெளியீட்டாளர்களுடன் என்டிஎம் இணைந்து செயலாற்றுகிறது.
மொழிபெயர்ப்புகளை வெளிக்கொண்டுவர இத்திட்டம் இரு வகையான முறைகளைப் தற்காலிகமாகப் பின்பற்றுகிறது:
|
»
|
மூல வெளியீட்டாளர்கள் தாங்களாகவே இத்திட்டத்துடன் இணைந்து மொழிபெயர்ப்புகளை வெளிக்கொண்டுவருதல்.
இம்முறையில் என்டிஎம்மின் பங்கெடுப்பு செலவில் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்வதாகவோ அல்லது
கல்விசார்ந்த உதவியை அளிப்பதாகவோ இருக்கும்.
|
|
»
|
மூல வெளியீட்டாளர்கள் நூலை மொழிபெயர்க்க விரும்பவில்லையெனில், மொழிபெயர்க்கவும், வெளியிடவும்,
விநியோகிக்கும் பணிகளுக்கும் என்டிஎம் இந்திய மொழி வெளியீட்டாளர்களை அணுகும். மொழிபெயர்ப்பின்
காப்புரிமை என்டிஎம்மிற்கே சொந்தமாகும். காப்புரிமை வைத்திருக்கும் மூல வெளியீட்டாளர்கள்
உரிமைத்தொகை பெறுவார்கள். இந்திய மொழி வெளியீட்டாளர்கள் நூலை மொழிபெயர்க்க முன்வரவில்லையெனில்,
என்டிஎம் தானே மொழிபெயர்த்து அச்சுக்குத் தயாரான பிரதியை (Camera Ready Copy - CRC)
இந்திய மொழி வெளியீட்டாளர்களுக்கு கொடுக்கும். மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை அச்சிட்டு
விநியோகிக்கும் பொறுப்பை மட்டும் அந்த வெளியீட்டாளர்கள் ஏற்றுகொள்ளவார்கள்.
|
இதில் இரண்டாவது வகை முழுத்தயாரிப்பு பொறுப்பு முறை (Turnkey Method) என அறியப்படுகிறது.
|
|
|