விளம்பரங்கள்

என்டிஎம்மின் ஊடக பிரிவானது வரும் ஆண்டுகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் நாட்டுப்புற நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு சில தொடர்ச்சியான விளம்பரப் படங்களை உருவாக்க இருக்கிறது. இது ′′பதச்சித்ரா′′ என்று அழைக்கப்படுகிற கதைச்சொல்லுதல் மற்றும் சுருள் ஓவியம் பற்றிய ஒன்றும், இருவேறுபட்ட பொருட்குறி மொழிபெயர்ப்பு (Inter-semiotic Translation) பற்றிய ஒன்றும் ஆகிய இருவகையான விளம்பரப் படங்களை உருவாக்கியிருக்கிறது. பதச்சித்ரா என்ற நாட்டுப்புற நிகழ்ச்சி முக்கியமாக மேற்கு வங்காளத்தின் மேற்குப் பகுதியில் காணப்படுகிறது.