மென்பொருள்

மொழிபெயர்ப்புக்களை குறைந்த செலவில் துரிதமாகவும் அதிக அளவிலும் கொண்டு வருவதற்கான பல நல்ல புதுமையான வாய்ப்புகளைப் புதிய தொழில்நுட்பங்கள் வழங்குகின்றன. எந்திர உதவி மொழிபெயர்ப்பிற்கான (Machine Aided Translation) மென்பொருள் உருவாக்கத்தில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

ஏற்கனவே அரசிடமிருந்து மென்பொருள் உருவாக்கத்திற்காக நிதியுதவி பெற்றுவரும் சி-டாக் (C-DAC), டீடிஐஎல் (TDIL), ஐஐடீ (IIT)-க்கள் போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள முயற்சிகளில் என்டிஎம் மறுபடியும் ஈடுபடாது. இருப்பினும், பயிற்சி மற்றும் மனிதவள மேம்பாடு போன்ற சிலவற்றில் துணைபுரிவது, சில முயற்சிகளில் இணைந்து பணியாற்றுவது, கூட்டு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பது என்று பல வழிகளில் எந்திர மொழிபெயர்ப்பின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு என்டிஎம் உதவும்.

இவை மட்டுமல்லாமல் இன்-லான் (In-Lan) என்ற ஆங்கிலம்-கன்னடம் (எந்திர மொழிபெயர்ப்புத் தொகுப்பு விதிகளை அடிப்படையாக கொண்டது) ஒன்றையும் என்டிஎம் உருவாக்கி வருகிறது. இதன் முக்கிய நோக்கம் கொடுக்கப்படும் ஆங்கில வாக்கியங்களை கன்னடத்திற்கு எந்திர வழி மொழிபெயர்ப்புச் செய்வதாகும்.
  » திறம்பட்ட, பயனுள்ள மொழிபெயர்ப்புக்களை வெளிக்கொணர்வதில் நேரடியாகப் பயன்படும் அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்குதல், குறிப்பாக எண்ணியல் கருவிகளான இணையவழி சொற்களஞ்சியங்கள், இருமொழி அகராதிகள், மொழிபெயர்ப்பு நினைவகத்திற்கான மென்பொருள் போன்றனவற்றை உருவாக்குதல்.
  » மின்-அகராதிகள் (e-dictionaries), வோர்ட்நெட் (wordnet), மொழி பகுப்பாய்வு (language analysis) மற்றும் தொகுப்புக் கருவிகள் (synthesis tools), சொல் அடைவுத் தொகுப்பி (concordancer), வருவழக்குப் பகுப்பாய்வி (frequency analyzer) போன்ற சொல்வளங்கள் ஒரு எந்திர மொழிபெயர்ப்பு கட்டகத்தின் அடிப்படை கூறுகள் ஆகும். இவைகளை தனி ஒரு நிறுவனத்தால் உருவாக்கிப் பராமரிக்க இயலாது. பல நிறுவனங்கள் நீண்ட காலத்திற்கு இணைந்து செயலாற்றினால்தான் இது முடியும். இணையவழி கலந்துரையாடல்கள் மற்றும் அமர்வுகள் ஏற்பாடு செய்வதன் மூலம் இந்நிறுவனங்களுக்கிடையேயான தொடர்பை அதிகரித்து குழு வேலைகளுக்கும் முயற்சிகளுக்கும் என்டிஎம் அடித்தளம் அமைத்து கொடுக்க முடியும்.
  » என்டிஎம்மால் பட்டியலிடப்பட்டுள்ள நூல்கள் மற்றும் அதன் மொழிபெயர்ப்புகள் முடிந்த அளவிற்கு எல்லா உரிமைகளும் பெறப்பட்டு எண்ணியல்முறை வடிவங்களில் கிடைக்கச் செய்யவேண்டும். இந்த எண்ணியல்முறை நூல்கள் செந்தரப்படுத்தப்பட்ட XML மற்றும் DTD ஒட்டுக்களுடன் பராமரிக்கப்படுவதை என்டிஎம் உறுதிப்படுத்த வேண்டும்.
  » உரைவிளக்கங்களுடன் நெறிப்படுத்திப்பட்ட சிறந்த தரமான இணை தரவகங்களை உருவாக்குவது தற்போது அனைத்துலக பாணியாக உள்ளது. இத்தகைய உரைவிளக்க தரவகங்களில் எந்திர கற்றல் யுத்திகளை பயன்படுத்துவதன் மூலம் எந்திர மொழிபெயர்ப்பு கட்டகங்களையும் பெறலாம். பேரளவில் சேகரிக்கப்பட்டுள்ள தரவுகளும், எடுக்கவேண்டிய முயற்சியின் பிரம்மாண்டமும் இதற்கு பெரிய தொடக்க மூலதனம் தேவை என்பதையும் தனி ஒரு நிறுவனம் இதைச் செய்வது கடினம் என்பதையும் காட்டுகின்றன. எனினும், இவை போன்ற முயற்சிகளை இவ்வகை நிறுவனங்கள் மேற்கொள்ள என்டிஎம் வசதிசெய்து கொடுக்கலாம், ஆதரவும் வழங்கலாம்.