|
அறிவுசார் நூல்களை அடையாளம் காணுதல்
என்டிஎம் தற்பொழுது மொழிபெயர்ப்பு செய்வதற்கான அறிவுசார் நூல்களை அடையாளம் கண்டு பட்டியலிட,
முதலாவதாக, மிகவும் அதிகமாக பரிந்துரைக்கப்பட்டுள்ள நூல்களின் பட்டியலை இந்திய பல்கலைகழகங்களின்
தரவுத்தளத்திலிருந்து எடுக்கிறது. இந்தப் பட்டியல் வல்லுநர்களால் கூர்ந்தாய்வு செய்யப்படுகிறது.
இந்திய மொழிகளில் இந்த நூல்களின் தேவை பற்றிய கருத்துக்களை பெற ஆசிரியர்கள், மாணவர்கள்
மற்றும் அந்தந்த பாடத்துறைகளைச் சார்ந்த பல்வேறு மொழியை சார்ந்த வல்லுநர்களும் தொடர்பு
கொள்ளப்படுகிறார்கள். இந்த பட்டியல் மேலும் பரிசீலிக்கப்பட்டு ஏராளமான மாணவர்களும்
கல்வியாளர்களும் பயன்பெறும் வகையிலான நூல்கள் பட்டியலிடப்படுகின்றன. இறுதியாக அறிவுசார்
நூல்களுக்கான துணைக்குழுவும் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் திட்ட ஆலோசனைக் குழுவும்
இந்த தலைப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கின்றன.
முதலில், என்டிஎம் மொழிபெயர்ப்பிற்காக இருபத்து ஒன்று பாடத்துறைகளிலிருந்து வல்லுநர்களால்
பரிந்துரைக்கப்பட்டுள்ள நூல் பட்டியலை சேகரித்திருக்கிறது. இந்த பாடப்பிரிவுகளிலிருந்து
105 மொழிபெயர்ப்பு நூல்களை கொண்டுவருவதற்கான வேலையில் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம்
ஈடுபட்டுள்ளது.
|
|
|