அறிவிப்பு

2-வார தீவிர மொழிபெயர்ப்புப் பயிற்சி

விண்ணப்பப் படிவம் (பதிவிறக்கிப் பூர்த்தி செய்க)
 
மொழிபெயர்ப்பாளர்களின் திறனை வளர்ப்பது தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் (NTM) கவனம் செலுத்துகிற பகுதிகளில் ஒன்று. தீவிரப் பயிற்சி, புத்தாக்கப் பயிற்சி ஆகிய முறைகளில் இத்திட்டம் மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பயிற்சியளிக்கிறது. தொழில்முறைசார் மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கல்விசார் ஆதரவினையும் இத்திட்டம் வழங்குகிறது. மொழிபெயர்ப்பில் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளை வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2-வார தீவிர மொழிபெயர்ப்புப் பயிற்சி

யாரெல்லாம் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும்? மொழிபெயர்ப்பினைப் பொழுதுபோக்காகக் கொண்டிருக்கிறவர்களும், தங்களுடைய வாழ்க்கைத் தொழிலாக அமைத்துத்கொள்ள விரும்புகிறவர்களும் இந்த மொழிபெயர்ப்புப் பயிற்சியில் சேரலாம். தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களும், மொழிபெயர்ப்பியல் படிக்கின்ற, தங்களுடைய அறிவையும் திறனையும் மேம்படுத்திகொள்ள விரும்புகிற மாணவர்களும்கூட இதில் பங்குபெறலாம். இப்பயிற்சியில் பொதுவாக (அ) புதிதாகப் பணியில் சேர்ந்துள்ள அலுவலர்களும், பல்வேறு பல்கலைக்கழகங்கள்/கல்வி நிறுவனங்களின் மாணவர்களும், (ஆ) அரசு மற்றும் அரசுசார் அமைப்புகளில் பணிபுரிகின்ற மொழி அதிகாரிகள், (இ) CSTT பணிகளில் ஈடுபட்டுள்ள நபர்கள் முதலானவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

எங்கே? இந்த மொழிபெயர்ப்புப் பயிற்சியும் புத்தாக்கப் பயிற்சியும் மைசூரில் அமைந்துள்ள தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் நடைபெறும். இந்த மொழிபெயர்ப்புப் பயிற்சியை வேறு நிறுவனங்கள் நடத்த முன்வரும்போது அவர்களுடன் இணைந்தும் நடத்தப்படுகின்றன.

 
கட்டணம்: இந்தப் பயிற்சிக்குக் கட்டணம் என்று எதுவும் கிடையாது, இருப்பினும், இப்பயிற்சியில் கலந்துகொள்கிறவர்கள் நிகழ்ச்சி தொடங்கும் அன்று ரூ.500 முன்வைப்புத்தொகையாக செலுத்தவேண்டும். இந்தத் தொகை ட்ரான்ஸ்லேசன் டுடே என்ற ஆய்விதழுக்கான ஓராண்டு சந்தா தொகையாக எடுத்துக்கொள்ளப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? இப்பயிற்சியில் பங்குபெற விரும்புகிறவர்கள் பூர்த்திசெய்து கையொப்பமிட்ட விண்ணப்பத்தினை (www.ciil.org / www.ntm.org.in இணையதளங்களில் ‘அறிவிப்புகள்’ பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்) உரிய சான்றிதழ்கள், நற்சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  The Project Director,
National Translation Mission
Central Institute of Indian Languages,
Manasagangotri, Hunsur Road,
Mysore, Karnataka 570006.

பயிற்சியளிப்பவர்கள் யார்? NTM இத்துறையில் வல்லநர்களாக உள்ள பயிற்சியாளர்கள் குழுவினைக் கொண்டுள்ளது. சில வல்லுநர்கள் NTM, CIIL இல் பணிபுரிகிறார்கள், சிலர் வேறு நிறுவனங்களிலிருந்து அழைக்கப்படுகிறார்கள். குறிப்பு: ஆண்டு முழுவதும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப உறையின் மேல்பகுதியின் இடது பக்கத்தில் ‘NTM மொழிபெயர்ப்புப் பயிற்சிக்கான விண்ணப்பம்’ என எழுதவேண்டும். பணியிலிருக்கும் நபர்கள் தங்களுடைய விண்ணப்பங்களைத் தங்களுடைய நிறுவனத்தின் தலைவரின் மூலமாக அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்கள் CIIL, NTM ஆகியவற்றின் இணையதளங்களில் வெளியிடப்படும்.

தொடர்புக்கு: அனைத்து விவரங்களுக்கும் பின்வரும் மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளவும்: ntmtrainingprog2016[at]gmail[dot]com