|
டிரான்ஸ்லேசன் டுடே A Biannual Double-blind Peer-reviewed refereed UGC Approved
Journal
டிரான்ஸ்லேசன் டுடே என்டிஎம்மால் ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படும் ஒரு ஆய்விதழ். இதில்
மொழிபெயர்ப்பு மற்றும் அதன் தொடர்பான பிரச்சினைகள் பற்றிய கட்டுரைகள் இடம்பெறும். இது
துறை நெறிமுறைகளின்படி சக ஆய்வு செய்யப்படுகிற ஒரு அனைத்துலக ஆய்விதழ் ஆகும். இதில்
மொழிபெயர்ப்பியல் மற்றும் அதைச் சார்ந்த பாடத்துறைகளின் ஆராய்ச்சிக் கட்டுரைகள், கற்றறிவாளர்கள்
மற்றும் மொழிபெயர்பாளர்களின் நேர்காணல்கள், விமர்சனக் கட்டுரைகள் முதலியன இடம்பெறும்.
வளரும் மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், கற்றறிவாளர்களுக்கிடையே கல்வி
சார்ந்த பரிமாற்றத்திற்கு அடித்தளம் அமைத்து கொடுக்கவும் இது பொறுப்பேற்றுக் கொள்கிறது.
மொழிபெயர்ப்பாளர்களால் புதிதாகச்செய்ய இயலும் என்பனவற்றை அறிமுகப்படுத்தவும், அப்படிப்பட்டவைகளோடு
இணைந்திருக்கும் சமூகப் பொறுப்புகளை அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரவும் இது உதவுகிறது.
|
|
மின்-இதழ்
|
இந்திய மொழிகளிலிருந்து வேறுமொழிகளிலும் வேறுமொழிகளிலிருந்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட
படைப்புகளை நேரடியாக வெளியிடுவதன் மூலமும், கட்டுரைகளை வெளியிடுவதன் மூலமும் வளர்ந்துவரும்
துறையான மொழிபெயர்ப்பியலை வளப்படுத்தி, தன் பங்களிப்பைச் செய்ய டிரான்ஸ்லேசன் டுடே
திட்டமிட்டுள்ளது.
டிரான்ஸ்லேசன் டுடேயில் மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்பாளர் தொடர்பான பிரச்சனைகள்
பற்றிய முழுநீள கட்டுரைகளும், ஒரு பிரச்சினையையோ அல்லது பகுத்தாயக்கூடிய ஒரு புதிரையோ
அவற்றின் முடிவுகளைத் தேட முற்படாமல் முன்வைக்கிற சிறுகட்டுரைகள்,, மதிப்புரைக் கட்டுரைகள்,
மொழிபெயர்ப்பு பற்றிய நூல்கள் மொழிபெயர்ப்புகள் பற்றிய மதிப்புரைகள், உண்மையான மொழிபெயர்ப்புகள்,
ஆசிரியருக்கு எழுதப்படும் கடிதங்கள், துரித டிரான்ஸ்லேசன் டுடே தேடல் மற்றும் பங்களிப்பவர்களுக்கும்
நூலாசிரியர்களும் பற்றிய விபரங்களும் இடம் பெறும். மொழிபெயர்பாளர்களுக்கான வேலைகள்,
மொழிபெயர்ப்பு மென்பொருள் விற்பனை போன்ற பகுதிகளும் வருங்காலத்தில் இதில் சேர்த்துக்கொள்ளப்
படலாம். பொதுவாக, மொழிபெயர்ப்பின்போது ஏற்படும் பிரச்சினைகள், குழப்பங்கள் மற்றும்
இந்திய மொழிகளிலிருந்து மற்றும் இந்திய மொழிகளுக்கு செய்யப்படும் மொழிபெயர்ப்புகளுக்கு
இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இருந்தாலும், இந்த ஆய்விதழ் இந்திய மொழிகளில்
மொழிபெயர்புத் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளை மட்டுமே எடுத்துக்கொள்வதாக தன்னை ஒரு
சிறு வட்டத்திற்குள் குறுக்கிக்கொள்ளாது. இலக்கணச் சிந்தனை எப்படி இந்தியாவிற்கு புதிதல்லவோ
அதுபோலவே மொழிபெயர்ப்புச் சிந்தனையும் இந்தியாவிற்கும் வளர்ந்து வரும் நாடுகளுக்கும்
புதிதல்ல.
பலமொழிகள் பேசும் இந்த நாடுகள் மொழிபெயர்ப்பாளர்களின் கனவாக இருக்கின்றன.
|
|
»
|
மொழிபெயர்ப்பு பணியில் ஒரு உத்வேகம் கொண்டுவர விளைகிறோம்.
|
|
»
|
மொழிபெயர்ப்பியலின் எல்லையை விரிவாக்க விளைகிறோம்.
|
|
»
|
மொழிபெயர்ப்புகளில் தரஉயர்வு காண விளைகிறோம்.
|
|
|
|
|