தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் முக்கிய நடவடிக்கைகள் பின்வருமாறு:
|
1.
|
இந்திய அரசியல் சாசனத்தின் எட்டாவது பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளிலும் அறிவியல்
மற்றும் தொழில்நுட்பச் சொற்றொகுதிகள் உருவாக்குதல்.
|
2.
|
மொழிபெயர்ப்பாளர்களுக்குத் தேவையான கல்வியை வழங்குதல்
|
|
- குறுகிய காலப் பயிற்சித்திட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல்
- மொழிபெயர்ப்பிற்கென தனிப் பாடப்பிரிவுகளைத் துவக்குதல்
- பயிற்றுவிப்புத் திட்டங்கள்
- மொழிபெயர்ப்பில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காக தனிச்சிறப்புப் பாடத்திட்டங்களை
மேம்படுத்துதல்
- ஆய்வு உதவித்தொகைகள் வழங்குதல்
- மொழிபெயர்ப்புத் தொடர்பான ஆய்வுகளை ஊக்குவித்தல்
|
3.
|
மொழிபெயர்ப்புத் தொடர்பான செய்திகளைப் பரப்புதல்
|
4.
|
தரம்வாய்ந்த மொழிபெயர்ப்புகளை ஊக்குவித்தல் மற்றும் பரவலாக்குதல்.
|
5.
|
தரம்வாய்ந்த மொழிபெயர்ப்புகளை ஊக்குவித்தல் மற்றும் பரவலாக்குதல் .
|
|
- ஆங்கிலத்திலிருந்து இந்திய மொழிகளுக்கு மொழிபெயர்த்தல் .
- ஒரு இந்திய மொழியிலிருந்து மற்றொரு இந்திய மொழிக்கு மொழிபெயர்த்தல்.
- இந்திய மொழிகளுக்கும் உலகின் பிற மொழிகளுக்கும் இடையே மொழிபெயர்த்தல்.
|
6.
|
தரம்வாய்ந்த அகராதிகள், சொற்களஞ்சியங்கள் (thesauri), வேர்டுபைன்டர் (word-finders),
ஆன்லைன் லுக்அப் (on-line look-ups) போன்ற கருவிகள் மற்றும் நினைவகம் (memory), வேர்டுநெட்
(wordnet)முதலிய மென்பொருட்களை உருவாக்குதல். நடமாடும் தொழில்நுட்பம் (Mobile Technology)
முதலான புதிய மற்றும் பரவலானத் தளங்களில் (wider platforms) உயரிய தொழில்நுட்பங்களைப்
பயன்படுத்தி மொழிபெயர்ப்பு செய்யும் சாத்தியக்கூறுகளை ஆராய்தல்
|