|
பிற்சேர்க்கை III:
|
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கட்டமைப்பு
|
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டமானது பொதுவாக ஒரு சிறிய அளவில் அமைந்த அமைப்பாக, தனக்குத்
தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட மீட்சித்தன்மையுடன் கூடிய நிறுவனமாக,
அதேவேளையில் அடையாளம் காணப்படும் பணிகளை நிறைவேற்ற தேவைப்படும் நிதி வசதியுடன் கூடிய
திட்ட வரவுசெலவுவினைக் கொண்டதாக இருக்கும். இத்திட்டத்தில் இயக்குநர் ஒருவரும் அவருக்குத்
தேவையான உதவிகளைச் செய்யும் 15 முதல் 20 முழு நேர கல்வியாளர்களும் சம எண்ணிக்கையிலான
துணை அலுவலர்களும் (கணக்காளர்கள், தணிக்கையாளர்கள், நூலகர்கள், இணைய வடிவமைப்பாளர்கள்,
அச்சு வல்லுநர்கள், பதிப்பித்தலுக்கு உதவும் உதவியர்கள், நிகழ்ச்சிகளை தொகுக்கும் உதவியர்கள்,
தொழில்நுட்பப் பணியாளர்கள், ஆவணக் காப்பாளர்கள் உள்ளிட்டோர்) நியமிக்கப்படுவர். இத்திட்டத்தின்
நடவடிக்கைகளை நெறிப்படுத்திச் செல்வதற்காக வழிகாட்டும் குழு ஒன்றும் இருக்கும். சுழற்சிமுறையில்
(உதாரணமாக, இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் பதவி காலத்திலும், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு
உறுப்பினர்கள் மாற்றீடு செய்யக்கூடியவகையில் உள்ளவாறு) அமைந்த முடிவுகள் மேற்கொள்ளும்
10 உறுப்பினர்கள் கொண்ட குழுவில் மொழிபெயர்ப்பாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள் முதலியோர்
இடம்பெற்றிருப்பர்.
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் இலக்கானது மொழிபெயர்ப்புகளைச் சார்ந்த தகவல்கள்,
பயன்பாடு, பயிற்சி, படைப்பாக்கத்திறன் முதலியவற்றை நோக்கி இருக்கும். இதன் செயற்பாடுகள்
ஒரு நடுவண் வழிமுறையாக மட்டும் இல்லாமல் பல்வேறு நிலைகளில் மாநில, உள்ளுர் சார்ந்த
பல்வேறு நிறுவனங்களின் உள்ளடக்கியதாக உள்ளன மற்றும் பல்வேறு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பும்
தேவைப்படுகிறது.
இரட்டிப்பான பணிகளைத் தவிர்த்தல், ஒருங்கிணைப்பினை உருவாக்குதல் மற்றும் ஒருங்கிணைந்த,
மீட்சிதன்மையுடன் கூடிய மொழிபெயர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பல்வேறு நிறுவனங்களின்
ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. நேஷனல் புக் ட்ரஸ்ட், பல்கலைக்கழக மானியக்
குழு, சாகித்திய அகாதமி, மொழிபெயர்ப்பு கேந்திரங்கள், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்,
பல்கலைக்கழகங்களில் மொழிபெயர்ப்பைப் பயிற்றுவிக்கும் மற்றும் ஆய்வுத்திட்டங்களாக வழங்கும்
துறைகள், கிரந்த அகாதமிகள், பிற மாநில அரசு நிறுவனங்கள், பொது நூலக வலையமைப்புகள் போன்ற
பொதுத்துறை நிறுவனங்களாகும். மேலும், பதிப்பாளர்கள், பத்திரிக்கைகள் மற்றும் பிற ஊடகங்கள்,
கூட்டாண்மை நிறுவனங்கள், நூல் விற்பனையாளர்கள் ஆகியோரின் இணைப்பும் அவசியமாகின்றது.
இதனுடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், முதிர்ச்சியடைந்த வாசகர்கள், பிற பொதுமக்கள்
முதலியவர்களுக்கிடையே கலந்துரையாடி அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும்வகையில்
இத்திட்டமானது செயல்படுத்தப்படும். ஏற்கெனவே இயங்கி கொண்டிருக்கின்ற பொதுத்துறை மற்றும்
தனியார் துறை நிறுவனங்களுக்கிடையே கையாளவேண்டிய உத்தியினை நிர்ணயித்தல் மற்றும் ஒன்றுபட்டு
உழைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மேம்படுத்துதல் என்பன இதில் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
இந்திய அரசியல் சாசனத்தின் ஆணைக்கிணங்க, எட்டாவது பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள 22
முக்கியமான மொழிகளிலும் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டமானது தொடங்கப்படுவது தர்க்க ரீதியான
கணிப்பியல் காரணங்களுக்கு சிறந்த முயற்சியாகும். எனினும் பிற மண்டல மொழிகளிலும் இத்திட்டத்தின்
வெளியீடுகளைத் தொடருதல்/ பரப்பப்படுதல் அவசியம் என்பதை மறந்துவிடக்கூடாது.
மேற்கண்ட பணிகளை மேற்கொள்வதற்காக 11 வது திட்டக்காலத்தில் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்திற்காக
ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நம்பப்படுகிறது (திட்ட நடவடிக்கைகள், பணியாளர்கள்,
கல்வி உதவித்தொகை போன்றவற்றிற்கு ரூ.80 கோடியும் மற்றும் உடனுழைத்துப் பணியாற்றும்
பிற நிறுவனங்கள்/ குழுக்களுக்குத் தேவையான நிதியம் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு ரூ.170
கோடியும் வழங்கப்படும்). 11வது திட்ட காலத்தில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் இத்திட்டத்திற்கு
வழங்கப்படும் உதவிகளை அடுத்துவரும் காலங்களில் மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இத்திட்டத்திற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க/ மேம்படுத்த மேலும்
கூடுதலான உதவிகள் தேவைப்படுகிறது.
மேலும், இத் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்
போன்ற பணிகளை மேற்கொள்ள மனித வள மேம்பாட்டு துறை (இதன் மொழி பிரிவின் கீழ் NBT செயல்படுவது
தனிச்சிறப்பிற்குரியது.) மேலும் பல்வேறு பல்கலைக்கழகங்கள், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்,
NBT மற்றும் CIIL உள்ளிட்ட பல மொழியியல் நிறுவனங்கள் இதன் ஆளுகையின் கீழ் இயங்குகின்றன
அல்லது பண்பாட்டுத் துறை (இவ்வமைச்சகத்தின் கீழ் சாகித்திய அகாதமியானது இயங்குகிறது)
போன்ற அமைச்சகங்களுக்கு ஒதுக்கீடு செய்வது குறித்தும் முடிவுசெய்யவேண்டியுள்ளது.
இத் திட்ட வரைவினை அரசிற்கு சமர்ப்பிக்கும் முன்னர் மேலும் விரிவுபடுத்துவதும் மற்றும்
மேம்படுத்துவதும் குறித்து முடிவு செய்வது பலனளிக்கும். சம்மந்தப்பட்ட அமைச்சகங்களின்
ஆலோசனைகளைப் பெறுவது மட்டுமல்லாமல், 10 உறுப்பினர் கொண்ட குழு ஒன்றினை மூளையாக செயல்படும்
வண்ணம் (think-tank) உருவாக்கி ஆலோசனைகளைப் பெறும் சாத்தியக்கூறுகளையும் ஆராயவேண்டும்.
|
1.
|
பேரா.பிபன் சந்திரா, தலைவர், நேஷனல் புக் ட்ரஸ்ட்
|
2.
|
பேரா. கே. சச்சிதானந்தன் (செயலர், சாகித்திய அகாதமி) அல்லது முனைவர் நிர்மல் கான்டி பட்டாசார்ஜி (தொகுப்பாளர், இந்தியன் லிட்ரேட்சர், மற்றும் உறுப்பினர் சாகித்திய அகாதமி)
|
3.
|
பேரா. பிரமோத் தல்கேரி (முன்னாள் துணைவேந்தர், CIEFL, தற்போது JNU) அல்லது பேரா. அலோக் பல்லா, CIEFL, ஹைதராபாத்
|
4.
|
பேரா. இந்திர நாத் சௌதிரி (முன்னாள் இந்தி பேராசிரியர், டெல்லி பல்கலைக்கழகம், இயக்குநர், நேரு மையம், செயலர், சாகித்திய அகாதமி)
|
5.
|
பேரா. யு.ஆர். அனந்தமூர்த்தி (முன்னாள் தலைவர், சாகித்திய அகாதமி, துணைவேந்தர், மகாத்மா காந்திப் பல்கலைக்கழகம் அல்லது திரு கிரிஸ் கர்நாட் (முன்னாள் இயக்குநர், நேரு மையம்)
|
6.
|
பேரா. அமியா தேவ் அல்லது பேரா. நபநீதா தேவ் சென் (இருவரும் முன்னாள் பேராசிரியர்கள், ஒப்பிலக்கியத் துறை, ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்)
|
7.
|
பேரா. எஸ்.பி. வர்மா (முன்னாள் ஜப்பான் மொழியியல் பேராசிரியர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர்)
|
8.
|
பேரா. ஹரீஸ் திரிவேதி, ஆங்கிலத்துறை, டெல்லி பல்கலைக்கழகம்
|
9.
|
பேரா. புஷ்பக் பட்டாசார்யா, இந்திய தொழில்நுட்பக் கழகம், மும்பை
|
10.
|
பேரா. உதய நாராயண சிங் (இயக்குநர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்) – உறுப்பினர் செயலர்
|
|
|
|
|