திட்ட வியூகம்

இந்த முழு திட்டமும் பெரும் பணிகள் மற்றும் நிகழ்ச்சிகளின் தன்மையைப் பொருத்து கீழ்க்கண்டவாறு பல உட்கூறுகளாகப் பிரிக்கப்பட்டு அல்லது உடைக்கப்பட்டு பின்வரும் வகையில் இத்திட்டத்தின் வியூகமானது விவரிக்கப்பட்டுள்ளது :
  » இந்திய அரசியல் சாசனத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து இந்திய மொழிகளிலும் உள்ள தொழில்நுட்ப மற்றும் அறிவியல் சொல்லாக்கத்திற்குத் தேவையான உதவிகள் மற்றும் ஆலோசனைகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கலைச்சொல்லாக்க ஆணையத்திற்கு வழங்குதல்.
  » மின்னணு அகராதிகள், பொருளியைபுச் சொற்களஞ்சியங்கள் போன்றவற்றைத் தாமே உருவாக்குதல் அல்லது பணிகளை வெளித்திறன் அடிப்படையில் பெறுதல்.
  » நமது பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் முக்கியமான துறைகளில் உள்ள அறிவுசார் நூல்களின் மொழிபெயர்ப்புகளை வெளியிடுதல் வேண்டும். இத்திட்டம், 11 வது திட்டக்காலத்தில், 65 முதல் 70 வேறுபட்ட பிரிவுகளில் (தொடக்கத்தில் 42 பிரிவுகள்) உள்ள 1760 அறிவுசார் நூல்கள் மற்றும் 200 பாடநூல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதை இலக்காகக் கொண்டுள்ளது. (இந்தி, உருது முதலான பட்டியலிடப்பட்ட இரு மொழிகளில் மட்டும் தற்போது தேசியக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT) 12ஆம் வகுப்பு வரையிலான பாடநூல்கள் மொழிபெயர்க்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது). இத்திட்டத்தைச் செயலாக்கத் துவங்கினால் மொழிபெயர்ப்புகள் மற்றும் பதிப்புக்களின் எண்ணிக்கை அடுத்துவரும் திட்டக்காலங்களில் மென்மேலும் அதிகரிக்கும் என்றும் ஒவ்வொரு திட்டக்காலத்திற்கான நன்னம்பிக்கை மதிப்பீடு சுமார் 8800க்கும் மேற்பட்ட நூல்கள் என்பதாகும்.
  » மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்புத் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் பகுப்பாய்வுகள் போன்றவற்றை வெளியிடும் இதழ்களுக்கு மானியங்களை வழங்குதல்.
  » நூலாசிரியர்கள்/ மொழிபெயர்ப்பாளர்கள் முதலானோருக்கு அறிவுசார் சொத்து /பதிப்புரிமைக் கட்டணங்கள் (வழங்க நிதியுதவிகளை அளித்தல்.
  » பல்வேறு நிலைகளில் மொழிபெயர்ப்பு பயிற்சிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல் போன்றவற்றிற்கு தேவையான நிதியுதவிகளை வழங்குதல்.
  » இயற்கை மொழியாய்வுச் செயலாக்கம், அல்லது NLP தொடர்பான ஆய்வுகளுக்குத் தேவையான நிதியுதவிகளை வழங்குதல்.
  » பல்கலைக்கழகங்களில் உள்ள துறைகளுக்கு மொழிபெயர்ப்பில் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்புகளை நடத்துவதற்காக (மொழிபெயர்ப்புச் கையேடுகள் தயாரித்தல் போன்ற குறிப்பிட்ட திட்டங்களுக்காக) நிதியுதவிகளை வழங்குதல்.

பல்கலைக்கழகங்களில் உள்ள துறைகளுக்கு மொழிபெயர்ப்பில் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்புகளை நடத்துவதற்காக (மொழிபெயர்ப்புச் கையேடுகள் தயாரித்தல் போன்ற குறிப்பிட்ட திட்டங்களுக்காக) நிதியுதவிகளை வழங்குதல்.
  » முடிவாக, மேற்குறிப்பிட்ட பணிகளை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல் முன்மொழியப்பட்ட தேசிய மொழிபெயர்ப்புத் திட்டமானது பின்வரும் அடிப்படை நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும்:
  » பல்வேறு துறைகளில் இருந்து வேறுபட்ட செயல்திறன் மற்றும் கல்வித்தகுதி பெற்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கான தரவுக் களஞ்சியம் ஒன்றை உருவாக்குதல். இக் களஞ்சியமானது குறிப்பிட்ட பணிகளுக்காக இணையத்திலும் மற்றும் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தினையும் தொடர்பு கொண்டு பெறும்வகையில் அமைக்கப்படும்.
  » மொழிபெயர்ப்பாளர்களுக்கான குறுகிய காலப் பயிற்சிவகுப்புகள் நடத்துதல்.
  » தரம்வாய்ந்த மொழிபெயர்ப்புகளை அனைவரும் அறியும்வகையில் பரப்புதல் மற்றும் ஊக்குவித்தல்.
  » எந்திர மொழிபெயர்ப்பை ஊக்குவித்தல்.

திட்டத்தின் மூலம் உதவிபெறுவதற்காக தேர்தெடுக்கும் வகையில் கண்டறியப்பட்டுள்ள இதழ்களின் தற்காலிகப் பட்டியல் ஒன்று பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது. திட்டமானது ஏற்பளிக்கப்பட்ட பின்பு இதழ்களின் முடிவான பட்டியல் உருவாக்கப்படும்.
 
மொழிபெயர்ப்பிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இதழ்கள்
(முன்மொழியப்பட்டுள்ள தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின்கீழ் உதவிபெற தகுதியானவை)

அஸ்ஸாமி
1. கரியாஷி (Gariyasi) (தொகுப்பாளர் ஹரே கிருஷ்ண தேகா)
2. பிராந்திக் (Prantik- தொகுப்பாளர் பி.ஜி. பருஹா)
3. அனுராத் பாரம்பர் (Anuraadh Parampar)( தொகுப்பாளர் பி. தாகூர்)

வங்காளி
4. அனுபாத் பத்திரிக்கை (Anubad Patrika)
5. பாஷாநகர் (Bhashanagar -தற்போது அரிதாகவே வெளிவருகின்றது)
6. பாஷாபந்தன் (Bhashabandhan)
7. எபாங்க் முஷாரியா (Ebang Mushaira) (அறிவுசார் நூல்களில் இருந்து தொகுக்கப்பட்ட கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகின்றது)
8. பிக்யாபன் பர்வா (Bigyapan parva) (மொழிபெயர்ப்புக் கலை மற்றும் திறனாய்வு)
9. அந்தர்ஜாடிக் அஞ்சிக் (Antarjatik angik) (வட்டார மற்றும் உலகலாவிய மூலங்களில் கவனம் செழுத்துகிறது)
10. பர்பன்டார் (Parbantar) (வட்டார மொழிபெயர்ப்புக்கள்-ஆசிரியர் மற்றும் நூல்களில் கவனம் செழுத்துகிறது)

போடோ
11. போடோ சாகித்திய சபா பத்திரிக்கை (Bodo Sahitya Sabha Patrika)

ஆங்கிலம்
12. இந்தியன் லிட்ரேட்சர் (Indian Literature) (சாகித்திய அகாதமி)
13. ட்ரான்ஸ்லேஷன் டுடே (Translation Today,CIIL)
14. யாத்ரா (Yatra) (அஸ்ஸோமிய மொழிபெயர்ப்புகள்)
15. அனிகேதனா (Aniketana) (கன்னட மொழியில் )
16. மலையாள லிட்ரேட்சர் சர்வே (Malayalam Literary Survey) (மலையாள மொழியில்)
17. உருது அலைவ் (Urdu Alive) (உருது மொழியில்)
18. கோபிதா ரிவியூ (Kobita Review) (இருமோழி-வங்காளி, ஆங்கிலம்)
19. இன்டர்நேஷனல் ஜர்னல் இன் டிரான்ஸ்லேஷன் (International Journal in Translation)

குஜராத்தி
20. வி (Vi) பல மொழிபெயர்ப்புக்களைத் தாங்கி வெளிவருகின்றது
21. கத்யபர்வா (Gadyaparva)

இந்தி
22. தானவ் (Tanav) (பல்வேறு இந்திய மற்றும் அயல்நாட்டு மொழிகளில்)
23. அனுவாத் (Anuvad) (பிற மொழிகளில் உள்ள மொழிபெயர்ப்புத் தொடர்பான கட்டுரைகள்)
24. பாஹல் (Pahal) (மொழிபெயர்ப்பிற்கான பத்திரிக்கை இல்லையெனினும் பல்வேறு மொழிபெயர்ப்புகளை வெளியிடுகிறது)
25. சாமாகாலின் பாரதிய சாகித்யா (Samakaalin Bharatiya Sahitya) (சாகித்திய அகாதமி)
26. வகார்த் (Vagarth)
27. நயா ஞானோதய் (Naya Gyanoday)
28. பாரதிய அவுவாத் பரிஷத் பத்திரிக்கை (Bharatiya Avuvad Parishad Parika)

கன்னடம்
29. அனிகேதனா (Aniketana) (மற்ற இந்திய மொழிகளில் இருந்து,ஆங்கிலத்தில் வெளிவரக்கூடிய அனிகேதனா நாழிதளில் இருந்து மொழிபெயர்க்கப்படுகிறது)
30. தேசகலா(Desa-kala)(பெருமளவிலான மொழிபெயர்ப்புக்களை வெளியிடுகிறது)
31. சங்கரமானா (Sankramana) (பெருமளவிலான மொழிபெயர்ப்புக்களை வெளியிடுகிறது)
32. சம்வாதா (Samvada) (பெருமளவிலான மொழிபெயர்ப்புகளை வெளியிடுகின்றது)
33. சங்கல்னா (Sankalana) மொழிபெயர்ப்புக்களையும் வெளியிடுகின்றது)

காஷ்மீரி
34. ஷீராஜா காஷ்மீரி (Sheeraza-kashmiri) (பண்பாட்டுத் துறை)
35. ஆலவ் (Aalav) (தகவல் தொழில்நுட்பத் துறை)

கொங்கனி
36. ஜாக் (Jaag- மொழிபெயர்ப்புகள் தொடர்பான அட்டவணையுடன்)

மலையாளம்
37. கேரளக் கவிதா (Kerala Kavita) ஏராளமான மொழிபெயர்ப்புகளுடன், முக்கியமாக இலக்கிய மொழிபெயர்ப்புகள்)
38. மாத்ருபூமி (Matribhumi) (மொழிபெயர்ப்புத் தொடர்பான சிறப்புச் செய்திகளுடன்)
39. கலா கௌமுடி (Kala-Kaumudi)
40. மத்தியமம் (Madhyamam)

மராத்தி
41. கெல்யான பஷந்தர் (Kelyane Bhashantar)
42. பாஷா அனி ஜீவன் (Bhasha ani Jeevan)
43. பிரதிஷ்டான் (Pratishtan)
44. பஞ்சதந்திரம் (Panchdhara) மராத்திய மூல நூல்களும் இந்தி, உருது, தெலுங்கு மற்றும் கன்னட மொழிபெயர்ப்புகளும்)
45. சக்ஷத் (Sakshat) (மொழிபெயர்ப்புத் தொடர்பான சிறப்புச் செய்திகளை வெளியிடுகிறது)

மைதிலி
46. மைதிலி அகாதமி பத்திரிக்கை (Maithili Academy Patrika) (அறிவுசார் நூல்களைத் தாங்கிவருகின்றது)
47. கர் பஹார் (Ghar-Bahar) (மொழிபெயர்ப்புக்களை தாங்கி வெளிவருகின்றது)

ஒரியா
48. சப்தபிக்ஷா (Saptabhiksha)

பஞ்சாபி
49. சம்தர்ஷி (Samdarshi பஞ்சாபி அகாதமி வெளியீடான இவ்விதழ் சில நேரங்களில் மொழிபெயர்ப்புக்களைத் தாங்கி வெளிவருகின்றது)
50. அக்கார் (Akkhar)(அம்ரிஷ்டர், படைப்புத் திறன்மிக்க )

சந்தாலி
51. சர் சகுன் (Sar-Sagun)
52. லோகந்திப் பத்திரிக்கை (Lohanti Patrika)

தமிழ்
53. திசைகள் எட்டும் (Disaikal Ettum) இந்திய (மொழிகளில் இருந்து)

தெலுங்கு
54. விபுலா (Vipula) (பொதுவாக அனைத்து மொழிகளிலும் உள்ள மொழிபெயர்ப்புகள்)
55. தெலுங்கு வாய்ஜ்னகியப் பத்திரிக்கை (Telugu Vaijnakia Patrika) (தெலுங்கு அகாதமி)