|
தொழில்நுட்பச் சிக்கல்கள்
|
இந்திய மொழிகளை உள்ளடக்கிய மின்னணு மொழிபெயர்ப்புக் கருவிகளின் வளர்ச்சியானது தொடக்க
நிலையிலேயே உள்ளன. அவை சொல் செயலாக்கிகள், , அகராதிகள், மேலாண்மைக் கருவிகள், சொல்
வங்கிகள், ஆன்லைன் அகராதிகள், ஆன்லைன் மற்றும் காட்சிநிலை பொருளியைபுச் சொற்களஞ்சியங்கள்,
வேர்டு பைன்டர்ஸ், மொழிபெயர்ப்பு நினைவக மென்பொருட்கள், மின் மொழிபெயர்ப்பாளர்கள் (=
எந்திர மொழிபெயர்ப்பு மென்பொருட்கள்), மொழிபெயர்ப்புப் பயிற்சி மென்பொருட்கள், சொல்லகராதிகள்,
விரிதரவுகள், எழுத்து சரிபார்ப்பான், இலக்கணச் சரிபார்ப்பான், மின்னணு அகராதிகள், தொழில்நுட்பச்
சொல்லகராதிகள், இலக்கணச் சொல்லகராதிகள், ஆன்லைன் கருவிகள், பண்பாட்டுச் சொற்றொகுதிகள்,பல்வேறு
தேடுதல் வசதிகளை உள்ளடக்கியவை ஆகும். மேற்குறிப்பிட்ட அனைத்து வகை கருவிகளும் (எந்திரவழி
மொழிபெயர்ப்புப் பயன்பாட்டுத் தொகுதியைத் தவிர) மொழிபெயர்ப்பாளர்களுக்குத் துணை நிற்க
கூடிய வகையில் இருக்குமே தவிர, இவை உண்மையான மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொள்ளாது.
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டமானது, எந்திர மொழிபெயர்ப்பில் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு
உதவும் பயிற்சிகளை அளித்தல், மனிதர்களின் தொழில்நுட்ப வளத்தைப் பெருக்குதல் போன்ற நடவடிக்கைகளில்
மற்றவர்களுடன் இணைந்து செயற்படும். மேலும், இப்பணிகளில் ஈடுபட தேவையான ஒத்துழைப்பை
வழங்குதல், உதவிகள்/வசதிகளை ஏற்படுத்தி தருதல் போன்ற பணிகளில் ஈடுபடும். உன்னத கணிப்பியல்
வளர்ச்சி மையம் (சி-டாக்), இந்திய மொழிகளில் தொழில்நுட்ப மேம்பாடு (TDIL) போன்ற தோழமை
நிறுவனங்களுடன் இணைந்து கீழ்க்கண்ட பணிகளை மேற்கொள்ள தேவையான உதவிகளை இத்திட்டம் அளிக்கும்:
|
a.
|
தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல். குறிப்பாக, வினைதிறன் மிகுந்த,
திறம்பட்ட மொழிபெயர்ப்புகளை அளிக்கவல்ல இலக்கமுறை கருவிகளான பொருளியைபுச் சொற்களஞ்சியங்கள்,
இருமொழி அகராதிகள், மொழிபெயர்ப்பிற்கான நினைவக மென்பொருள் போன்ற பயன்பாட்டுத் தொகுதிகளை
உருவாக்குதல்.
|
b.
|
மின்அகராதிகள், வேர்டுநெட், மொழி பகுப்பாய்வு மற்றும் பகுப்பாய்வு கருவிகள், சொற்தொகுப்பு
விளக்கப்பட்டியல்கள் (சொல்லடைவு), அலைவெண் பகுப்பாய்விகள் போன்ற மொழியின் சொல்லாக்க
வளங்களை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல். இப்பணிகள் நீண்ட கால ஒப்பந்தங்கள் அடிப்படையிலும்
பல்வேறு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் வகையிலும் இருக்கும். தொடர்ச்சியான
கூட்டங்கள், இணையவழி கலந்தாய்வுகள் நடத்துவதன் மூலம் தொடர் தகவல் பரிமாற்றத்திற்கு
வழிவகை செய்து, குழுவாக செயல்பட ஏதுவான ஒரு பொதுவான தளத்தினைத் தேசிய மொழிபெயர்ப்புத்
திட்டம் உருவாக்கும்.
|
c.
|
மூல நூல்கள் மற்றும் மொழிபெயர்ப்புகளை கூடியவரையில் தெளிவான இலக்கமுறை வடிவத்தில் பெறப்படவேண்டிள்ளது.
மேலும், NTM இன் மூலம் இப்பணிகள் தொடர்பான பதிப்புரிமைச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண
வேண்டியுள்ளது. சொத்துக்களான இந்த இலக்கமுறை மூலப்பொருட்களைத் செந்தரப்படுத்தப்பட்ட
விரிவாக்கக் குறியீட்டு மொழி ஒட்டுக்கள் (XML) மற்றும் ஆவண வகை வரையறைகள் (DTDs) போன்றவற்றைக்
கொண்டு தொடர்ந்து பராமரிப்பதைத் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் உறுதிப்படுத்தும்.
|
d.
|
குறிப்புரைகள் அடங்கிய மற்றும் சீர்மைநிலை கொண்ட உயர்தர இணை விரிதரவு ஒன்று LDC-IL
திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுப் பேணப்பட்டு வருகிறது. இத்தகைய விரிதரவுகள், எந்திரம்
கற்றல் தொழில்நுட்பம் செயற்படுவதைப் போன்று எந்திர மொழிபெயர்ப்பு அமைப்பை அடையும் முயற்சியில்
உதவிபுரியக்கூடியவை.
|
e.
|
ஐக்கிய நாடுகள் சபையால் 1996 ஆம் ஆண்டில் 15 நாடுகளை உள்ளடக்கித் துவக்கப்பட்ட ‘உலகளாவியப்
பிணைய மொழி’(UNL) என்ற வழிமுறையைச் சார்ந்த அனைத்துலக மொழி அடிப்படையில் அமைந்த அணுகுமுறையை
மேம்படுத்துதல். ஏற்கெனவே ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் எந்திரமொழிபெயர்ப்பை மேற்கொள்வதற்கான
பல்வேறு கருவிகள், தொழில்நுட்பங்கள், வளங்கள் போன்றவற்றை இந்தியத் தொழில்நுட்பக் கழகம்,
மும்பை உருவாக்கியுள்ளதைப் பரவலாக்கவேண்டும்.
|
|
|
|