|
பின்னிணைப்பு I
மொழிபெயர்ப்புத் தொழில்துறையை ஊக்குவித்தல்
|
(ஜெயதி கோஷ் அவர்களின் குறிப்பு)
|
பல்வேறு வகைப்பட்ட இந்திய மொழிகளில் உள்ள கலைச் செல்வங்களைப் பாதுகாக்கவும் பெருமளவிலான
செய்திகள் அனைத்துத் தரப்பு மக்களும் தங்களது சொந்த மொழியில் பெறுவதற்கான வழிவகைக்
காண இந்தியாவில் தரமான, வேகமான, உயர்த்தர மொழிபெயர்ப்புத் தொழில்துறையானது தேவைப்படுகிறது
என்பது மிகத் தெளிவு. பல்வேறு மொழிகளில் உள்ள வெவ்வேறு வகையான அறிவுசார் நூல்களின்
வெகுமதியினை உணர்ந்து பல்வேறு நாடுகள் மொழிபெயர்ப்புச் சேவைகளை மேம்படுத்த திறமையான
வழிமுறைகளைக் கையாளுகின்றன. பெரிய வளரும் நாடான சீனாவில் பெரிய அளவில் உடனுக்குடன்
பரவலான செய்திகள் கிடைக்கும் வகையில் துடிப்புடன் அமைந்த மொழிபெயர்ப்புத் திட்டமானது
செயல்படுத்தப்படுகின்றது. சிறிய வளர்ந்த நாடுகளில், (ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்து,
பின்லாந்து போன்ற) பெரும் விகிதாச்சாரமான மக்கள் முக்கியமான அயல்நாட்டு மொழிகளில் சரளமாகப்
பேசக்கூடிய திறன் படைத்தவர்களாகவும் அம்மொழிகளில் சிறந்த கல்வியறிவைப் பெற்றவர்களாகவும்
திகழ்கின்றனர் என்பது உண்மை. அதேவேளையில், அந்நாடுகளில் வட்டார மொழிகளும் செல்வாக்குடன்
திகழ்கின்றன. காரணம், அங்கு பெருமளவில் மொழிபெயர்ப்புகள் அவர்களுக்குக் கிடைக்கின்றன.
தேவையான மொழிபெயர்ப்புகளின் விவரம்:
|
|
»
|
ஆங்கிலத்தில் இருந்து இந்திய மொழிகளுக்கு
|
|
»
|
இந்திய மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்கு
|
|
»
|
இந்திய மொழிகளுக்கு இடையே
|
கீழ்க்கண்ட நூல்களை மொழிபெயர்க்க வேண்டியுள்ளது
|
|
»
|
பள்ளிகள் வரையிலான பாட நூல்கள்
|
|
»
|
மேல்நிலைப் பள்ளிப் பாட நூல்கள்
|
|
»
|
பிற பாடங்களைக் கற்பிக்க உதவும் நூல்கள்
|
|
»
|
அறிவியல், சமூக அறிவியல், மனிதவியல், கலை போன்ற துறைகளில் உள்ள தனிச்சிறப்பான நூல்கள்
|
|
»
|
மேற்கோள் நூல்கள் (கலைக்களஞ்சியங்கள் முதலியன)
|
|
»
|
இலக்கியம்
|
|
»
|
புனைக்கதைகள் தவிர்த்த நடப்புச் செய்திகள்
|
|
»
|
விவரக்கையேடுகள்
|
|
»
|
பத்திரிக்கைகள், இதழ்கள்
|
|
»
|
இணையவழி வளங்கள்
|
பல்வேறுபட்ட அமைவிடங்களில் இருந்து, தங்களின் பல்வேறு பணிகளில் ஒன்றாக இப்பணிகளைத்
தற்போது சில தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. நேஷனல் புக் ட்ரஸ்ட்,
பொதுவாக, புகழ்வாய்ந்த விருதுபெற்ற எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புக்களை ஆங்கிலத்திலிருந்து
இந்திய மொழிகளுக்கும் அதேபோல இந்திய மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்க்கும்
பணிகளை மேற்கொள்கிறது. புகழ்வாய்ந்த இலக்கியங்களையும் நடப்புச் செய்திகளையும் மொழிபெயர்த்து
வெளியிடும் பணிகளை (கதா பப்ளிஷர்ஸ், பிரஜாசக்தி பத்திரிக்கைக் குழுமம் போன்ற) ஒரு சில
தனியார் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. மேற்குறிப்பிட்ட அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியவாறு,
தனது கட்டுப்பாட்டில் நேரடியாக மொழிபெயர்ப்பை மேம்படுத்தும் பணிகளைச் மேற்கொள்ளும்
வகையில் தற்போது எந்தவொரு பொதுத்துறை நிறுவனமும் இல்லை என்றே கூறவேண்டும்.
தற்போது மொழிபெயர்ப்புப் பணிகளில் எழும் நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும் காரணிகள்
பின்வருமாறு:
|
1.
|
மேற்குறிப்பிட்டவாறு அனைத்து இடங்களிலும் மொழிபெயர்ப்பு வளங்கள் கிடைப்பதில் அகன்ற
மற்றும் பெரிய இடைவெளிகள் காணப்படுகின்றன.
|
2.
|
தரமான மொழிபெயர்ப்புக்களைப் பெறுவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. சரிசமமற்ற அல்லது
மோசமான தரத்துடன் மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. மொழிபெயர்ப்புகள் கடினமான மொழிநடை
அல்லது இலக்கியத் தரத்துடன் இருப்பதால் இதன் நுகர்வு குறைவாக உள்ளது. பொதுவாக, மொழிபெயர்ப்புகளின்
உற்பத்தியின் தரமும் வேறுபட்டுள்ளது.
|
3.
|
மொழிபெயர்ப்பிலேயே பெருமளவு நேரம் செலவிடப்படுவதால் பெரும் பின்னடைவு எற்படுகின்றது.
நடப்புச் செய்திகளின் மொழிபெயர்ப்பானது பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் நிலை ஏற்படுகிறது.
|
4.
|
மொழிபெயர்ப்புகளை மேம்படுத்தப் போதுமான நடவடிக்கைகள் செய்யப்படவில்லை மற்றும் மொழிபெயர்ப்புகளைப்
பற்றிய விவரங்களைப் பிரபலப்படுத்தத் தேவையான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படவில்லை. தரமான
மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருந்தப் போதிலும் அவற்றினைப் பற்றிய விவரங்கள் உரியவர்களைச்
சென்றடையவில்லை.
|
5.
|
மொழிபெயர்ப்புத் தொடர்பான பணிகளில் போதிய ஒருங்கிணைப்பு இல்லை. எனவே, மொழிபெயர்ப்புகளில்
தேவையற்ற வகையில் இரட்டிப்பான பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், மொழிபெயர்ப்பிற்கும்
மூலத்திற்கும் இடையேயான சிக்கலான மாறுநிலை இடைவெளிகளானது தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.
|
6.
|
ஆங்கிலத்தில் இருந்து மண்டல மொழிகளுக்கும் அதேபோல மண்டல மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்கும்
மொழிபெயர்க்கும் இணையவழி மொழிபெயர்ப்புச் சேவைகள் இன்னும் முழு வளர்ச்சியடையாத ஆரம்பநிலையிலேயே
உள்ளன. உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையத்தின் (C-DAC) Vyakarta, MANTRA, NCST மும்பையின்
MaTra, குறிப்பாக கான்பூர் உள்ளிட்ட இந்திய அறிவியல் கழகங்களின் Anusaaraka, Anglabharati
போன்ற எந்திரவழி மொழிபெயர்ப்பிற்குச் சில முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. பண்பொத்த தொடரியல்
உள்ள இந்திய மொழிகளில் மட்டுமே இவ்வகை மொழிபெயர்ப்புக்கள் சிறிதளவு வெற்றியைப் பெற்றுள்ளன
என்ற போதிலும் இவ்வகை முயற்சிகளில் சிக்கல்கள் தொடர்கின்றன. ஆன்லைன் சொற்களஞ்சியங்களின்
வளங்கள் கிடைப்பது கடினமாக உள்ளன மற்றும் அவற்றிற்கிடையேயான ஒருங்கிணைப்பும் குறைவாக
உள்ளது.
|
எனினும் இந்தியாவில் கீழ்க்கண்ட காரணிகள் வேகமான மொழிபெயர்ப்புச் சேவையினை மேற்கொள்ள
உதவும் வகையில் உள்ளன:
|
1.
|
இருமொழிபுலமைப் பெற்ற மக்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுவதால், அதனைப் பயனுள்ள
வகையில் இத்திட்டத்தின்கீழ் பயன்படுத்த இயலும். கல்விக்கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பினை
உருவாக்கும் ஒரு மூலமாகவும் இது திகழும்.
|
2.
|
மொழிகளில் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன என்பதால் அவற்றை மேலும் விரிவுபடுத்துவது
எளிது. தரமான மொழிபெயர்ப்பை அளிக்கத் தேவைப்படும் திறமைகளை அதிகரிக்க உதவும் வகையில்
அந்நிறுவனங்கள் பயிற்றுவிக்கும் படிப்புகளில் புதிய பாடத்திட்டங்களைச் சேர்ப்பது என்பதும்
எளிதான காரியமாகும்.
|
3.
|
மொழிபெயர்ப்புகள் செய்வதை ஒரு குறிப்பிட்ட அளவிலான சந்தை மற்றும் குறைந்த விலைப் பதிப்புகளில்
நூல்கள் என்று நிர்ணயிப்பத்தால் பதிப்புரிமைத் தொடர்பான சிக்கல்கள் குறைந்த அளவே இருக்கும்.
|
4.
|
இத்திட்டத்திற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டவுடன், பெரிய அளவிலான
தனியார்த்துறை ஒத்துழைப்புடன் அதிக எண்ணிக்கையில் மற்றும் குறைந்த விலைத் தயாரிப்புகளாக
இதன் படைப்புகள் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட முடியும்.
|
கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள சில விவரங்கள் பின்வருமாறு:
|
|
»
|
மொழிபெயர்ப்பினைச் சார்ந்த கல்வியை அளிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் எவை? மற்றும்
அவற்றின் செயல்பாடுகள் எவ்வகையில் பலனளிக்கின்றன?
|
|
»
|
இத்தகைய நடவடிக்கைகளில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு என்ன? இவற்றை வெளிப்படையாக
நிறைவேற்ற தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா?
|
|
»
|
பல்வேறு மொழிகளில் தற்போது நடப்புக் காலச் செய்திகள், இலக்கியங்கள், இதழ்கள் போன்ற
பல்துறை சார்ந்த நூல்கள் தானியங்கு முறையில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகின்றனவா? அவ்வாறெனில்,
அவற்றை முடிவுசெய்பவர் யார்?
|
|
»
|
இத்தகைய முடிவுகள் நடுநிலைப்படுத்தப்படுகின்றதா அல்லது மாநில அரசுகளால் ஒருங்கிணைக்கப்படுகின்றதா?
|
|
»
|
அப்படியென்றால் பதிப்புரிமை, மொழிபெயர்ப்புகளை மேம்படுத்துதல், பல்வேறுப் பணிகளைப்
பகிர்ந்தளித்தல், கண்காணித்தல் போன்ற மொழிபெயர்ப்புச் சேவைகள் தொடர்பான பணிகளைச் செய்ய
ஒரு பொதுத்துறை நிறுவனம் இருக்கின்றதா?
|
|
»
|
இப்பணிகளில் தனியார் பங்களிப்பினை மேலும் அதிகரிப்பதை ஊக்குவிப்பது எவ்வாறு? நிதிக்கொள்கை
அல்லது பிற ஊக்கத்தொகைகள் போன்றவற்றை இத்திட்டத்தில் முதலீடு செய்து இத்திட்டத்தினை
ஊக்குவிக்கலாமா? நூல் வெளியீட்டாளர்களுடன் தொழில்கூட்டு மேற்கொள்ளலாமா?
|
|
»
|
மொழிபெயர்ப்பின் தரத்தை எவ்வாறு உறுதிசெய்வது, கண்காணிப்பது, மேற்பார்வையிடுவது? இப்பணிகளில்
சிறப்பான வளங்களைப் பெருக்குவதற்காகப் பயிற்சியளிப்பதும் மற்றும் தொழில்முறைப் பணியாளர்களை
உருவாக்குவதும் அவசியமா?
|
|
»
|
மொழிபெயர்ப்புகளின் மிக வேகமாக வெளியீட்டை ஊக்குவிப்பது எவ்வாறு?
|
|
»
|
எந்திரவழி மொழிபெயர்ப்பின் சாத்தியக்கூறுகள் எவை? மரபுவழி மொழிபெயர்ப்பு மற்றும் எந்திர
மொழிபெயர்ப்பு ஆகியவற்றினை ஒருங்கிணைக்கும் சாத்தியக்கூறுகள் எவை?
|
உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள நடவடிக்கைகள்:
தேசிய அளவில் மொழிபெயர்ப்புத் தொழில்துறையை மேம்படுத்துவதற்காக கீழ்க்கண்ட அமைப்புக்களின்
பிரதிநிதிகளை ஈடுபடுத்துதல்
|
|
»
|
மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்கள் (அலுவலக மொழிகள் துறை, கல்வி, கலாச்சாரம், அறிவியல்
போன்ற துறைகள்)
|
|
»
|
பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்
|
|
»
|
பல்வேறு நிலைகளில் மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படும் தொழில்துறை
|
|
»
|
ஊடகம்
|
|
»
|
பதிப்புத் தொழில்துறை
|
|
»
|
மொழிகளைப் பயிற்றுவிக்கும் பள்ளிகள்
|
நாம் கூடிய விரையில் பொருத்தமான வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களைக் கண்டறிய வேண்டியதும்
அவர்களுக்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றினை மொழிபெயர்ப்புத் துறை வல்லுனர்களை ஆலோசித்து
உருவாக்கவேண்டியதும் அவசியம்.
|
|
|