நிதி வருவாய் வழிவகையும் திட்ட வரவுசெலவும்

நிதியம்

இந்தியாவில் மொழிபெயர்ப்புத் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட உள்ள தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்திற்குத் தேவையான உதவிகளை இந்திய அரசு வழங்கும். இத்திட்டமானது நடுவண் அரசின் திட்ட முறையாகும். பன்னிரண்டாவது திட்டக்காலத்தில் இருந்து இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் அகராதிகள், பொருளியைபுச் சொற்களஞ்சியங்கள், மொழிபெயர்ப்பு மென்பொருட்கள் மற்றும் பல்துறைச் சார்ந்த மொழிபெயர்ப்புகளைப் பல்வேறு செயலாண்மைக் குழுக்களின் மூலம் விற்பனை செய்து வருவாயை உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அனைத்துத் தரப்பு மக்களும் இதன் நூல்களை வாங்கிப் பயன்படுத்தும் வகையில் நுகர்வோருக்கு கட்டுப்படியாகும் விலையில் விற்பனை செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு முறையில் நூல்களை வெளியிடும் நிறுவனம் மற்றும் நூல்கள் வெளியிட மானியங்கள் வழங்கப்பட வேண்டிய நிறுவனங்கள் எவை என்பது என்று திட்டத்தின் வழிகாட்டும் குழு முடிவு செய்யும்.

இம்மொழிபெயர்ப்புத் திட்டம் தொடர்பான இணையவழி ஆவணங்கள் மற்றும் கருவிகளை அனைவருக்கும் இலவசமாக வழங்குவதென முடிவுசெய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பிற்கான பயிற்சித்திட்டங்கள் மற்றும் அங்கீகாரம்/ சான்றிதழ்கள் வழங்குவது போன்றவற்றிற்கு வரையறுக்கப்பட்ட கட்டணங்களை வசூலிப்பது குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை.

திட்ட வரவுசெலவு

முன்னதாக உருவாக்கப்பட்ட தேசிய அறிவுசார் ஆணையத்தின் மூலப் பரிந்துரையில் இத்திட்டம் ரூ.250 கோடியில் அமையவேண்டும் என்று தேசிய அறிவுசார் ஆணையம் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகம்போன்றவை பரிந்துரைத்தப்போதிலும் திட்டத்தின் தொடக்க நிலையில் ரூ.100 கோடிக்குள் இருக்கும் வகையில் திட்ட வரவுசெலவைத் தயாரிப்பதென முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதற்கேற்றவாறு, நிதிக்குழுவின் (EFC) அறிக்கையை மாற்றியமைத்து ரூ.98.97 கோடிக்கு முன்மொழிவானது திருத்தியமைக்கப்பட்டது. எனினும், தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் நிதியறிக்கைக் குழுக் கூட்டத்தில்(NTM-EFC Minutes) அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கலைச்சொல்லாக்க ஆணையத்திற்கு ரூ.20 கோடி, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு ரூ.5 கோடி என்று ஒதுக்க உத்தேசிக்கப்பட்ட தொகையை நீக்குவதென முடிவுசெய்யப்பட்டுள்ளது (பார்க்க: NTM-EFC Minutes, உருப்படி 11(iv & v), பக்கம் 6; the observation of PAMD, reported under Para 4, Page 2; and also, Para 10 stating the consensus view on this item).

முடிவாக, தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்திற்கான வரவுசெலவு ஒதுக்கீடு ரூ.73.97 கோடியில் அமைப்பதென இதற்கான நிதிக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. (பார்க்க: NTM EFC-Minutes No. F.25-4/2008-IFD, dated May 22, 2008), (பார்க்க: NTM Minutes, உருப்படி 11.(i), பக்கம் 6).

ஒப்புதல் அளிக்கப்பட்ட இத்திட்டத்திற்கான வரவுசெலவு ஆண்டுவாரியாகப் பின்வருமாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    2008-09 2009-10 2010-11 2011-12 TOTAL
  Recurring 1519.712 2026.305 1800.731 2050.682 7397.43
1. Human Res 99.312 100.305 108.831 118.082 4,26.53
2. Publ+ Other Tasks 1181.00 1901.60 1661.00 1901.60 6645.20
3. General Maint. 14.40 14.40 14.40 14.40 57.60
4. Equip./ Softw. 220.00 00.00 00.00 00.00 2,20.00
5. Equip. Maint. 00.00 5.00 11.50 11.50 28.00
6. Travel 5.00 5.00 5.00 5.00 20.00
அட்டவணை 1: தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்திற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டு ஆண்டுவாரியாகப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள திட்ட வரவுசெலவு
 
இத்திட்டத்தின் மூலம் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ள மொத்த பணிகளின் விவரம் (மேற்குறிப்பிட்ட அட்டவணையில் உருப்படி 2 இன்படி) பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது. (CSTT, NCERT ஆகிய நிறுவனங்களுக்கான ஒதுக்கீட்டுத் தொகை நீக்கப்பட்டுள்ளது)
 

நிகழ்ச்சிகள் /பணிகளுக்கான செலவு (ரூ. இலட்சத்தில்)


a. நூல்வெளியீடுகள் & மொழிபெயர்ப்புகள் 1760 குறிப்புரை நூல்கள் + 200 பாடநூல்கள் 4520.00
b. G.I.A. மொழிபெயர்ப்புத் தொடர்பான இதழ்களுக்கு மானியங்கள் வழங்குதல் 200.00
c. G.I.A. நூலாசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் முதலியோருக்குப் பதிப்புரிமைக் கட்டணங்கள் வழங்குதல் 35.20
d. G.I.A. மொழிபெயர்ப்பாளர் பயிற்சிக்கான உதவிகள் 100.00
e. Task+GI.A மின் அகராதிகள்/ பொருளியைபுச் சொற்களஞ்சியங்கள் (Rs 390 cr+Rs 600 cr) 990.00
f. G.I.A. NLP ஆய்வுகளுக்கான உதவிகள் 400.00
g. G.I.A. மொழிபெயர்ப்பில் பட்டம், பட்டயங்கள் வழங்கும் பல்கலைக்கழகத் துறைகளுக்கான உதவிகள் 200.00
h. இணையத்தைப் பராமரித்தல் (National Register/Bulletin/E-zine /Search/Tools) 200.00
  Total (in lakhs) 6645.20
அட்டவணை 2: பணிகளை நிறைவேற்றுதல், ஆலோசனைகள் பெறுதல், வெளிநபர்களுக்குப் பணித்திறன் அளித்தல், நிதிநல்கை போன்றவற்றிற்காக ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்ட வரவுசெலவு
 
இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் அனுகிருதி முதலான மொழிபெயர்ப்புத் திட்டங்கள் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்படவேண்டும்; இரட்டிப்பான பணிகளைச் செய்யக்கூடாது என்று நிதிக்குழுஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் நிதிநல்கைத் திட்டமானது மேற்கண்ட அட்டவணையில் வரிசை எண் ‘b’ முதல் ‘g’ வரை கொண்டதாகும் (‘e’ ஐத் தவிர இதன் நிதிநல்கைத் திட்டம் தனியே பிரிக்கப்படும்). பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், மொழிபெயர்ப்பில் ஈடுபடும் தனிநபர்கள், ஆய்வாளர்கள் முதலானவர்களுக்கு ரூ. 1535. 20 இலட்சத்தில் நிதிநல்கை வழங்கப்படும். ‘b’, ‘d’, ‘e’ மற்றும் ‘f’ ஆகிய வரிசைகளில் உள்ள நிதிநல்கையைப் பயன்படுத்துவதற்குரிய பரிந்துரைகள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வரவேற்கப்படும். ‘c’ என்ற வரிசையில் உள்ள திட்டங்களுக்கான நிதிநல்கையானது அடையாளம் காணப்படும் நூலைப் பொருத்து அமையும். ‘g’ ஆனது மொழிபெயர்ப்பைக் கற்பிக்கும் பல்கலைக்கழகங்களில் உள்ள புலங்களுக்கும் துறைகளுக்கும் நிதி நல்கையாக அளிக்கும் தொகையைக் குறிப்பதாகும். இத்திட்டத்தின் நிதிநல்கைப் பிரிவின் நடவடிக்கையானது தேசிய மொழிபெயர்ப்புத் திட்ட வழிகாட்டும் குழுவின் தொடக்கநிலை முடிவுகளின்படி செயற்படுத்தப்படும்.

தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் முன்மொழிவிற்கான ஒப்புதலை 18.6.2008 அன்று மாண்புமிகு மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கியுள்ளார். 2007-08 ஆம் நிதியாண்டில் அமைச்சகமானது ஏற்கெனவே ரூ.90 இலட்சத்தை முதல் தவணையாக ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது (பார்க்க:வரவுசெலவுத் திட்ட மானியம்(BG), பக்கம் 20). மேலும் இதனைச் செயற்படுத்தத் தேவையான தலைப்புகளையும் உட்தலைப்புக்களையும் உருவாக்கியுள்ளது. ஆனால் நிதிக்குழுவின் அறிக்கை பெற தாமதமானதால் இத்தொகையானது செலவிடப்படவில்லை. மீண்டும் 2008-09 ஆம் நிதியாண்டிற்கு முன்பணமாக ரூ.100 இலட்சம் தேசிய மொழிபெயர்ப்புத் திட்ட வரவுசெலவுத் திட்ட மானியத்தில்(BG) பின்வருமாறு சேர்க்கப்பட்டுள்ளது:

  2008-09 B.G.    
Salary, incl Consultancy/ Tr.Fee/Honor 50.00 Office Ex 13.00
O.T.A. 00.00 O.A.C. 05.00
Medical 00.50 O.C. 05.00
Travel Ex 10.00 G.I.A. 16.50
    Total 100.00
அட்டவணை 3: 2008- 09 ஆம் ஆண்டிற்குத் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வரவுசெலவு மானியம்
 
প্রতিকী বাজেটের প্রথম দুই-চஅமைச்சகத்தால் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ள முதல் இரண்டு காலாண்டிற்கான தவணைகளை (ரூ. 41.75 இலட்சம்) ஒதுக்கீடு செய்யுமாறு முதன்மைக் கணக்கு அலுவலரைநிறுவனம் கோரியுள்ளது (கடித எண் F.1-1/2008-09/Accts/BUDGET/(NTM)). CCAஇன் பரிந்துரைகளின்படி இத்திட்டத்திற்கான நிதிநல்கைகளுக்கான கணக்குகளைத் (NTM-GIA) தனியே தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. CCA நிதிக்குழுவின் செயல் முறைகளின்படி 2008-09 ஆம் ஆண்டிற்கு தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்திற்கு ரூ.1419.712 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது (ஏப்பிரல்-மே2008 மதிப்பீட்டின்படி). திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுப்பதில் காலத்தாமதம் ஏற்பட்டுள்ளதால் முதலாண்டிற்கான நிதி ஒதுக்கீட்டை தேவைக்கேற்றவகையில் நியாயமான அளவில் குறைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான ஆண்டுவாரியான நிதிப்பகிர்வுப் பின்வருமாறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. ஆலோசனைகள் பெறுதல், வெளித்திறன் அடிப்படையில் பணிகளை நிறைவேற்றுதல் போன்றவற்றிற்காக ஏற்கெனவே உள்ள அட்டவணை 1 மற்றும் 2 ஆகியவற்றினை மாற்றியமைத்து இவ்வட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.
 
திட்டவரவுசெலவு (ரூ. இலட்சத்தில்)
  2008-09 Addl to be asked for 2008-09 Released 2009-10 2010-11 2011-12 TOTAL
Salary, incl Consultancy/ Tr.Fee/Honor 50.00 49.312
100.688
124.950*


274.950
100.305
110.757
183.260+
58.310

452.632
108.831
121.833
331.079#


561.743
118.082
134.016
364.187


616.285
1955.61
O.T.A. 00.00 00.000 00.000 00.000 00.000 00.000
Medical 00.50 00.000 00.550 00.600 00.65 002.30
Travel Ex 10.00 05.000 30.000 35.000 45.00 125.00
Office Ex 13.00 112.000 45.000 50.000 00.000 220.00
O.A.C. 05.00 09.400 14.400 14.400 14.400 057.60
O.C. 05.00 390.050 1099.923 1169.720 837.027 3501.72
G.I.A. 16.50 175.400 383.800 422.18 537.320 1535.20
Total 100.00 966.800        
Grand Total   1066.800 2026.305 2253.643 2050.682 7397.43
குறிப்பு: * 300 நூல்களுக்கான மொழிபெயர்ப்புப் கட்டணங்கள் + 440 நூல்களுக்கான மொழிபெயர்ப்புக் கட்டணங்கள் +58.31 முந்தைய ஆண்டுகளுக்கான 140 பணிகள் # மொத்தம் 580 நூல்கள் & 0.90 இணையவழிச் செய்திகளை மொழிபெயர்த்தல் போன்றவற்றின் கட்டணங்களுக்கான கட்டணம்.

அட்டவணை 4: தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்திற்காக ஏற்பளிக்கப்பட்டு ஆண்டுவாரியாக பிரிக்கப்பட்டுள்ள திட்ட வரவு செலவு

தொடக்க நிலையில் 2008-09 ஆம் ஆண்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதியைவிட குறைந்த அளவான நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அட்டவணை 1 இன் படி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ள தொகை ரூ.1519.712 இலட்சம்(NTM Minutes & DPR ன்படி) என்பதற்குப் பதிலாக தற்போது ரூ.1166.88 இலட்சம் ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது. 2008-09 ஆம் ஆண்டிற்கான சேமிப்பானது 2010-11ஆம் நிதியாண்டிற்கு மாற்றப்பட்டதைத் தவிர மற்ற ஆண்டுகளுக்கான தொகையில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. முதலாமாண்டில் 440 நூல்கள் என்ற இலக்குடன் மொழிபெயர்ப்பினை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்தல் (ஒவ்வொரு நூலும் சுமார் 250 பக்கங்கள் என்ற எண்ணிக்கையில்), 300 க்கும் அதிகமான நூல்கள் (68% முதல் 70%) மொழிபெயர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பத்தாவது ஐந்தாண்டு திட்டமான ‘கதா பாரதி’ திட்டத்தின்கீழ் மொழிபெயர்ப்புக் கட்டணமாக 1000 சொற்களுக்கு(= மூன்று அச்சிடப்பட்ட பக்கங்கள்) ரூ.300 என்றவகையில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் வழிகாட்டும் குழு ஒப்புதல் அளித்தால் 1000 சொற்களுக்கு ரூ.500 என்ற வீதத்தில் வழங்கலாம். இவை மிகவும் தொழிநுட்பமான மொழிபெயர்ப்பு என்பதால் ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளருக்கும் குறைந்தபட்சமாக ரூ.41,665 என்ற வீதத்தில் வழங்கவேண்டியிருக்கும். மொத்தமாக உள்ள 1960 நூல்களுக்கும் மொழிபெயர்ப்பு செய்தல், மதிப்பீடு செய்தல், மெய்ப்புத்திருத்துதல் மற்றும் நூல்கள் வெளியிடுவதற்கான மானியம் வழங்குதல், அச்சிடல் போன்ற பணிகளுக்காக ரூ.4520 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது (அட்டவணை 2 பார்க்கவும்). 2008-09 ஆம் நிதியாண்டிற்கு 440 தலைப்புகளில் உள்ள நூல்களுக்கான மொழிபெயர்ப்பினை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டால் 300 நூல்கள் வெளியிடும் வகையில் (சராசரியாக 250 பக்கங்கள்) உருவாகும் எனக் கருதினால் ரூ.520 இலட்சம் கோர இயலும். இத்தலைப்பின் மொத்த ஒதுக்கீடு ரூ.4520 இலட்சமாகும் (இந்நிதியில் ஒரு பகுதி ஆலோசனைகள் பெறுவதற்கான தலைப்பிலும் மற்றொரு பகுதிப் பிறச் செலவினங்களுக்கான (OC) தலைப்பிலும் பயன்படுத்தப்படும்).

கூடுதல் தொகை ரூ.520 இலட்சம் நேர்த்தி செய்தலுக்கான நிறுவுகை (அட்டவணை 2, உருப்படி a)
1. மொழிபெயர்ப்பாளர்களுக்கான மதிப்பூதியம் 124.95 இலட்சம் (ரூ.41650x300)
2. மதிப்பீடு செய்தல் 15.00
3. தொகுப்பித்தல் மற்றும் சீரமைத்தல் 75.00
4. தரவுகள் உள்ளீடு செய்தல்/ வெளியீட்டிற்கான மென்பொருட்கள் 30.00
5. அச்சிடல் (விளம்பரம், பத்திரிக்கை) 200.05
6. பதிப்புரிமைக் கட்டணங்கள் 75.00

டெல்லியில் போதிய அடிப்படை வசதிகள், சாதனங்களுடன் கூடிய அலுவலகம் உருவாக்கவேண்டும் என்பதற்காக ரூ.220 இலட்சம் (முதலாமாண்டிற்கு ஒதுக்கீடு ரூ.125.00 இலட்சம்) கோரப்பட்டுள்ளது. முதலாமாண்டு என்பதால் திட்டங்கள் தொடர்பான குழுக் கூட்டங்கள் அதிக அளவில் நடைபெறும் என்பதால் பயணச் செலவினங்கள் என்ற தலைப்பில் ரூ.5 இலட்சம் என்பதற்குப் பதிலாக ரூ.15 இலட்சம் கோரப்பட்டுள்ளது. அட்டவணை 1இல் OAC “பொது பராமரிப்பு”என்ற தலைப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.14.20 இலட்சம் நிதிஒதுக்கீட்டில் எவ்வித மாறுதலும் இல்லை.

கடைசியாக, தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தில் நான்கு ஆண்டுகளுக்கு நிதிநல்கைப் பிரிவிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ரூ.1535.20 இலட்சம் ( அட்டவணை 2 ஐப் பார்க்கவும்) ஆகும். இதில் 2008-09 ம் ஆண்டிற்கான பங்கு ரூ.383.80 இலட்சம் என்ற போதிலும் நடப்பு நிதியாண்டில் மீதம் ஏழு மாதங்களே உள்ள நிலையினைக் கருத்திற்கொண்டு கூடுதல் நிதியாக ரூ.191.20 இலட்சம் மட்டும் கோரப்பட்டுள்ளது.

தொடக்க நிலை முயற்சிகள்

தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் இத்திட்டத்திற்கான எண்ணங்களை செயற்படுத்தவும் கீழ்க்கண்ட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்:

1. இத்திட்டத்தில் பொதுமக்கள் பெரிதும் ஆர்வம் காட்டுவதால் அவர்களை இவ்வியக்கத்தின் நடவடிக்கைகளில் பங்கேற்க செய்யும் வகையில் இம்மொழிபெயர்ப்புத் திட்டத்தைப் பற்றிய அடிப்படை தகவல்களை ஏற்கெனவே உள்ள நிறுவனத்தின் முதன்மை இணையத்தளத்தில் வெளியிடுதல்.
2. இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின்கீழ் ஏற்கெனவே செயற்படுத்தப்படும் மொழிபெயர்ப்புத் திட்டங்கள், அகராதிகள் உருவாக்கம் போன்ற திட்டங்களைத் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின்கீழ் ஒருங்கிணைக்கவேண்டும் என்பதற்கிணங்க(See NTM Minutes, உருப்படி 11.(vi), பக்கம் 6; also Para 8 under FA’s observations), தற்போது அனுகிருதி உள்ளிட்ட மொழிபெயர்ப்பிற்காகச் செயற்படும் திட்டங்களில் பணிபுரிவோர் தற்காலிகமாக ஆலோசகர்களாக நியமிக்கப்படுவர்.
3. தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்திற்கான இணையத்தளத்தின் களப் பெயர் முகவரி ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. அனைத்து விவரங்களும் எளிதில் கிடைக்கும் வகையில் 22 மொழிகளிலும் மாற்றிக்கொள்ளத்தக்க வகையில் இணையத்தளத்தை உருவாக்க தேவையான பணிக்குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன(See NTM Minutes, உருப்படி 11(vii), பக்கம் 6) .
4. மேற்கண்ட அனைத்துப் பணிகளும் வெளித்திறன் அடிப்படையில் ஆலோசகர்கள் மூலம் நிறைவேற்றப்படும். (See NTM Minutes, உருப்படி 11(viii), பக்கம் 6 மற்றும் உயர்க்கல்வித் துறை அரசுச் செயலரின் கருத்து, பாரா 7, “அனைத்துப் பணிகளையும் வெளித்திறன் மூலம் மேற்கொள்ளத் தேவையான உட்கட்டமைப்பினை ஏற்படுத்திக் கொள்ளுதல்”). இதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து முடிக்கப்பட்டதும் இப்பணியானது திட்ட வழிகாட்டும் குழு அல்லது அமைச்சகத்தின் ஒப்புதலுடன் தொடங்கப்படும்.
5. கூடிய விரைவில் லாங்மென் குழுவுடன் இணைந்து அச்சிடப்பட்ட அகராதிகள் (PPP mode- நேரடி இணைப்பு நெறிமுறையில் அமைந்த) குறைந்தபட்சம் 6 மொழிகளிலாவது வெளிவரவிருக்கின்றன. தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ் முதன்முதலில் வெளிவரும் இந்த மொழிபெயர்ப்புக் கருவிகளை மின்அகராதிகளாக மாற்றியமைக்கத் தேவையான தொடர் நடவடிக்கைகள் மேற்குறிப்பிட்ட ஆலோசகர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும்.
6. தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக மானியக் குழு, மத்திய பணியாளர் தேர்வாணையம் போன்றவற்றின் பாடத்திட்டங்கள், மேற்கோள் நூல்கள் முதலியவற்றைச் சேகரித்து தரவுத்தளம் ஒன்று உருவாக்கப்படும். அவற்றிலிருந்து மொழிபெயர்ப்புக்குத் தேவையான நூல்கள் திட்டத்தின் வழிகாட்டும் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும்.
7. திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையின் மூலப்படிவமானது அனைவரும் அறியும் வகையில், விரிவாக, தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
8. ASP உரைநிரல் மற்றும் MySQL தரவுத்தளப் பின்புலத்தில் தேசிய அளவிலான மொழிபெயர்ப்பாளர்களுக்கான பதிவேடு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
9. திட்டத்தினைப் பற்றிய விழிப்புணர்வினைப் பெறும்வகையில் ஊடகங்களின் வாயிலாக 22 மொழிகளிலிலும் விளம்பரங்கள், செய்திகள் வெளியிடப்படும்.
10. இந்திய மொழிகள் நடுவண் நிறுவனம், நேஷனல் புக் ட்ரஸ்ட் மற்றும் சாகித்திய அகாதமி இணைந்து நடத்திய அனுகிருதி இணையத்தளத்தினைத் (www.anukriti.net) தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் இணையத்தளத்துடன் இணைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் இவ்விணையத்தளத்தைப் பிரித்து உள்ளடக்கத்தை மேம்படுத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. (“திட்டக்குழு ஒப்புதலுடன் இதுகாறும் நடத்தப்பட்டு வந்த மொழிபெயர்ப்புகளுக்காக அமைக்கப்பட்ட அனுகிருதி இணையத்தளம், தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படவேண்டும்”: NTM நிகழ்ச்சிப் பதிவுகள் பக்கம் 2, பத்தி 2)
11. திட்டக் குழுவின் அறிவுரைக்கேற்ப கூடுமானவரை, திறந்த மூல மென்பொருள் மற்றும் பயனாளர் தோழமைப் பின்புலத்துடன் கூடிய தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் இணையத்தளமானது ஒரு பொதுக்களமாகவும் அனைத்து இந்திய மொழிகளிலும் எளிதில் அணுகும்வகையில் அமைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும் (NTM நிகழ்ச்சிப் பதிவுகள் பக்கம் 2, பத்தி 3).
12. பெரிய பன்னாட்டு வெளியீட்டு நிறுவனங்களுடன் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்திற்கான ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதற்கான வரையறைகளையும் சாத்தியக்கூறுகளையும்தெரிந்துகொள்வதற்காக நிறுவனம் பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளது. இது தொடர்பான முடிவுகளை தேசிய மொழிபெயர்ப்புத் திட்ட வழிகாட்டும் குழு எடுக்கும்.